அசிங்கமான தோற்றத்தால் அவமானம்… மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

அசிங்கமான தோற்றத்தால் அவமானம்… மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரான சென்ராயன் துணை நடிகராகவும், குணசேத்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார்.

குறும்படங்களில் நடித்த அது பின்னர் திரைப்படத்துறைக்கு நடிகராக அறிமுகமான இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதை அடுத்து ஆடுகளம் , மூடர்கூடம், ரம்மி, போங்கடி நீங்களும் உங்க காதலும், மோசக்குட்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சென்றாயன் நடித்திருக்கிறார் .

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தோற்றத்தால் தான் பட்ட அவமானத்தை குறித்து பேசி இருக்கிறார். அதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருப்பேன்.

அப்படி ஒருமுறை இரவு நேரத்தில் ரோட்டில் நடந்து சென்ற போது நான் திருடன் என போலீஸ் பிடித்துக் கொண்டு போயிட்டாங்க அப்போது நான் பொல்லாதவன் படத்தில் நடித்திருக்கிறேன் என கூறிய பிறகுதான் போலீஸ் என்னை விட்டாங்க என்று மிகவும் எமோஷனலாக கூறியிருக்கிறார் .

தனது மனைவி கயல்விழி பற்றி கூறிய அவர் என் மனைவி கயல்விழிக்கு நடிகை சினேகா என்றால் மிகவும் பிடிக்கும். நாங்கள் திருமணம் ஆகி 4 வருடங்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம். அதன் பின்னர் பிக் பாஸில் இருந்த போது தான் அவர் கர்ப்பமான செய்தி அறிந்தேன். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் என் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து சினேகா வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு பயங்கரமான சர்ப்ரைஸ் கொடுத்தேன் என்றார் சென்ட்ராயன்.