ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்த விழாவில் ராம்சரணை அவமானப்படுத்திய ஷாருக் கான் – பொங்கியெழுந்த தென்னிந்திய ரசிகர்கள்!

ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்த விழாவில் ராம்சரணை அவமானப்படுத்திய ஷாருக் கான் – பொங்கியெழுந்த தென்னிந்திய ரசிகர்கள்!

அம்பானியின் குடும்ப திருமண கொண்டாட்டம் சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்தது. இதில் உலக பணக்காரர்களான பில்கேட்ஸ் மற்றும் மார்க் சூக்கர்பெர்க் ஆகியோர் கலந்துகொண்டனர். பாலிவுட்டின் அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் ஆகிய மூவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். அப்போது ஷாருக் கான் அந்த பாடலுக்கு தங்களோடு நடனமாட நடிகர் ராம்சரணையும் அழைத்தார். அப்போது உற்சாக மிகுதியில் அவர் “எங்கே இருக்கிறாய் ராம்சரண்… இட்லி” என அழைத்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

வட இந்தியாவில் தென்னிந்தியர்களை இட்லி வடை சாம்பார் என அழைத்து கேலி செய்யும் குணம் ஒரு முன்னணி நடிகர் வரை சென்றுள்ளது என தென்னிந்திய ரசிகர்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர். பலரும் ஷாருக் கான் தன்னுடைய இழிவான் வார்த்தைகளுக்கான மன்னிப்புக் கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.