சம்பளக் காசு £6 ஆனால் 18 மணி நேர வேலை ஹிந்துயாவின் பாஸ்போட்டையும் பறிந்த சுவிஸ் அரசு

சம்பளக் காசு £6 ஆனால் 18 மணி நேர வேலை ஹிந்துயாவின் பாஸ்போட்டையும் பறிந்த சுவிஸ் அரசு

சுவிஸ் நாட்டை மட்டும் அல்ல, மொத்த உலகையே அதிரவைத்துள்ளது, உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஹிந்துயாவின் வழக்கு. கடந்த வெள்ளிக் கிழமை, ஹிந்துயா அவரது மனைவி, பிள்ளை பிரகாஷ் ஹிந்துயா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சுவிஸ் நீதினம்றம் வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது என்று அறியப்படுகிறது. மேன் முறையீடு எதனையும் செய்ய வாய்ப்பே இல்லை ராஜ என்றாகிவிட்டது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிந்துயா குடும்ப சொத்து மதிப்பு மட்டும், 37B பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். பிரித்தானியாவின் 3வது பெரும் பணக்காரர். அது மட்டும் அல்ல, பிரிட்டன் அரச குடும்பத்திற்கே, பணத்தை வாரிக் கொடுத்து மிகவும் செல்வாக்கோடு இருந்தவர்கள் இவர்கள். பிரிட்டனில் போடப்பட்ட சில வழக்குகளை, காணமல் ஆக்கியவர்கள். ஆனால் அதிஷ்டம் எல்லா நேரங்களிலும் வேலை செய்யுமா ? இல்லை. சுவிஸ் நாட்டில் இவர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

சுவிஸ் நாட்டில் ஜெனிவாவில் மிகப்பெரிய ஆடம்பர மாளிகை ஒன்று இவர்களுக்கு உள்ளது. அங்கே வேலை பார்க என படிப்பறிவு இல்லாத பாமர இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியதோடு. அவர்களை 18 மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார் ஹிந்துயா. போதாக் குறைக்கு நாள் ஒன்றுக்கு சம்பளமாக 7 சுவிஸ் பிரங்கை கொடுத்துள்ளார். அதுவும் இந்திய ரூபாயில். (சுவிஸ் பிராங்கில் அல்ல). ஹிந்துயாவின் நாய் குட்டிக்கு செலவு செய்யும் கணக்கை ஒரு லெஜர் புத்தகத்தில் எழுதி வந்துள்ளார்கள். அதில் நாய் குட்டிக்கு மட்டும் ஒரு நாளைக்கு, 25 சுவிஸ் பிராங் செலவு செய்துள்ளார்கள்.

ஆனால் வேலை ஆட்களுக்கு 7 பிராங் சம்பளம் கொடுத்துள்ளார்கள், என்று ஆதாரங்களை புட்டு புட்டு வைத்துள்ளார் அரச தரப்பு வக்கீல். ஹிந்துயாவின் வக்கீலால் வாயே திறக்க முடியவில்லை. அந்த அளவு ஆதாரங்களை காட்டியுள்ளது அரசு தரப்பு. இது போக 125 மில்லியன் பிராங்குகள் வரியாக கட்ட உள்ளதாகவும், ஹிந்துயாவின் மகன் பிரகாஷ் வரி ஏய்ப்புச் செய்ததாகவும் சுவிஸ் அரசு ஏற்கனவே ஒரு வழக்கை பதிவு செய்துள்ள நிலையில். 4 பேரின் பிரித்தானிய கடவுச் சீட்டை(பாஸ்போட்டை) சுவிஸ் அரசு பறிமுதல் செய்துள்ளதாக, சற்று முன்னர்(24) செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் 4 ஹிந்துயா குடும்ப உறுப்பினர்களும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது இந்திய மத்திய அரசுக்கு பெரும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது. காரணம்..

இந்தியாவில் அம்பாணி , அதானிக்கு பின்னதாக ஹிந்துயா குடும்பமே மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பம். அஷோக் லிய லான் வாகன உற்பத்திம் எண்ணைக் கிணறுகள், என்று 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இவர்களிடம் உள்ளது. சுமார் 2 லட்சம் பேர் இவர்களிடம் வேலை செய்கிறார்கள். ஆனால் தற்போது இவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.