எனக்கு இப்படிப்பட்ட பெண் தான் வேணும் – நடிகர் சிம்பு பளீச்!

எனக்கு இப்படிப்பட்ட பெண் தான் வேணும் – நடிகர் சிம்பு பளீச்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே பல்வேறு திரைப்படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு 2002ல் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சிம்பு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

குறிப்பாக அலை, கோவில்,குத்து , மன்மதன் , தொட்டி ஜெயா, காளை , சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் ,ஒஸ்தி, போடா போடி ,வாலு , மாநாடு , வெந்து தணிந்தது காடு, பத்து தலை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

சிம்புவுக்கு தற்போது 41 வயதாகிறது இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். இவர் சில பல காதல் தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். தொடர்ச்சியாக இவருக்கு வீட்டில் பெண் பார்த்தும் வருகிறார்கள் .ஆனால் திருமணம் எனபதே இவருக்கு செட் ஆகவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விடிவி கணேஷ் தனக்கு இப்படிப்பட்ட பெண் தான் வேண்டும் என சிம்பு கூறியதாக ஒரு ரகசிய விஷயத்தை கூறியிருக்கிறார்

அதாவது, தனக்கு காஃபி போட்டு கொடுக்க, சமைத்து கொடுக்க பெண் தேவையில்லை, அதற்கு வேலையாட்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை எனக்கு டாமினேட் ( அடக்கி ஆளும் )செய்யும் பெண் தேவை என்றும் அந்த பெண்ணின் பேச்சைக் கேட்டு நான் நடக்க வேண்டும் என்றும் ஆசையாம். அப்படிப்பட்ட பெண் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று தன்னிடம் நடிகர் சிம்பு கூறியதாக விடிவி கணேஷ் கூறியிருக்கிறார்.