தனுஷ் வாங்கும் சம்பளத்தை போல எனக்கும் தாருங்கள் என்று அடம் பிடித்த சிம்பு- கை நழுவும் வாய்ப்புகள் !

தனுஷ் வாங்கும் சம்பளத்தை போல எனக்கும் தாருங்கள் என்று அடம் பிடித்த சிம்பு- கை நழுவும் வாய்ப்புகள் !

ஒரு அடி வைத்தால் 10 அடி சறுக்குது என்று சொல்வார்கள். அந்த வகையில் சிம்புவின் நிலை உள்ளது. ஆனால் அவர் நிலமைக்கு அவர் தான் காரணமாக இருக்கிறார். காரணம் இது தான். அதாவது ஒரு நடிகர், தனது சம்பளத்தை எவ்வாறு நிர்ணயிக்கிறார் ? என்று கேட்டால் நடித்த படங்கள், அவை பெற்ற வெற்றிகளை வைத்து ஒரு தொகையைக் கேட்க்கிறார். இதனால், தயாரிப்பாளர்கள் அதனைப் பார்த்து ஓகே சொல்லி, நடிகரை புக் பண்ணுகிறார்கள். ஆனால்…

சிம்புவை பொறுத்தவரை அவர் அப்படி அல்ல. அவர் ஏனைய நடிகர்களைப் பார்த்து. அவர்களுக்கு இவ்வளவு கொடுக்கிறீர்களே …. ஏன் எனக்குத் தரக் கூடாது என்று கேட்டு பெரும் சர்சையை கிளப்பி வருவதால் தான் . பல பட வாய்ப்புகளை அவர் இழந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஐசரி கணேஷ் அவர்கள் சிம்புவை அணுகி, ஒரு புதுப் படத்திற்கு டீல் பேசி உள்ளார். உடனே சிம்பு தனது போட்டியாளரான ,

தனுஷை உதாரணம் காட்டி, அவருக்கு ஒரு நாளைக்கு 1 கோடி கொடுக்கிறார்கள் , அதனைப் போல எனக்கும் தாருங்கள் என்று, சற்றும் கூச்சப்படாமல் கேட்டுள்ளார். தனுஷ் கடைசியாக நடித்த அத்தனை படங்களும், செம ஹிட். கோடிக் கணக்கில் வசூல் செய்த படங்கள். அதனால் அவர் அப்படி ஒரு தொகையைக் கேட்க்கிறார் , அது நியாயம். ஆனால் அதனை சிம்பு எப்படிக் கேட்க்க முடியும் ? இது தான் ஐசரி கணேஷின் கேள்வியாக உள்ளது. தனது நிலை என்ன என்று தெரியாமல் சில நடிகர்கள், தமது போட்டி நடிகர்களை, பார்த்து அவர்கள் போல நாமும் சம்பளம் வாங்க வேண்டும் என்று எண்ணுவது, அவர்கள் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.