நான் காதலித்த பெண் வேறொரு ஆண் உடன் அப்படி பார்த்தேன் – சிவகார்த்திகேயன் பளீச்!

நான் காதலித்த பெண் வேறொரு ஆண் உடன் அப்படி பார்த்தேன் – சிவகார்த்திகேயன் பளீச்!

தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிக்க வருவதற்கு முன் நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வந்தார்.

அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலில் மெரினா திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படத்தில் ஒரு நல்ல அறிமுகத்தையும் ஹீரோவாக ஒரு நல்ல தோற்றத்தையும் கொடுத்து மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. 3 மனம் கொத்தி பறவை கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து நடித்து வந்ததால் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அமரன் மற்றும் எஸ்கே23 உள்ளிட்ட படங்கள் உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ள நிலையில் அதற்குள் தன்னுடைய 23 வது படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நிகழ் சிவகார்த்திகேயன் தனது முன்னாள் காதலி குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கலகலப்பாக பேசியிருக்கிறார். அதாவது நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை ஒன்சைடாக காதலித்து வந்தேன். நான் காதலித்த பெண் வேறொருளுடன் கமிட் ஆகிவிட்டார் .

அதனால் அந்த காதல் அப்படியே போய்விட்டது. நான் சென்னையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு அந்த பெண்ணை ஒரு முறை பார்த்தேன். அவருடன் வேறு ஒரு நபர் வந்திருந்தார். ஆனால், கூட வந்திருந்த அந்த நபர் அவர் காதலித்த பையனே கிடையாது இது வேறொரு பையன் என கலகலப்பாக சிவகார்த்திகேயன் பேச சிரிப்பொலியால் அரங்கமே அதிர்ந்து போனது.