காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு… வீட்டைவிட்டு வெளியேறிய நடிகை சோனாக்ஷி!

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு… வீட்டைவிட்டு வெளியேறிய நடிகை சோனாக்ஷி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தலிங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையான இவர் ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இந்நிலையில் தற்போது 37 வயதாகும் நடிகை சோனாக்ஷிந்தா ஜாகீர் இஃபால் என்ற தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறாராம். அவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. Double XL என்ற படத்தில் ஒன்றாக நடித்த அவர்களாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த திருமணத்திற்கு வீட்டில் யாருக்கும் ஒப்புதல் இல்லை என கூறப்படுகிறது. அதனால் அவர் தனது குடும்பத்தை பிரிந்து காதலர் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சோனாக்ஷியை அவரது அம்மா, சகோதரர் இருவரும் இன்ஸ்டாவில் unfollow செய்து இருக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் பிரச்னையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.