பாலிவுட்டில் அறிமுகம் ஆகும் ஸ்ரீ லீலா….. ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட்டில் அறிமுகம் ஆகும் ஸ்ரீ லீலா….. ஹீரோ யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் சென்சேஷனல் ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலிலா தொடர்ச்சியாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

நல்ல அழகான தோற்றம், வசீகரமான உடலழகு, கியூட்டான நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் என பின்னி பெடல் எடுப்பதோடு நடனத்தில் சூறாவளியாக இருந்து வருகிறார். இதனாலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.

கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலிலா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்தப்பட்டி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இந்தியா முழுக்க மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டது. இதை எடுத்து அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்க பாலிவுட் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது .

ஆம், நடிகர் சைப் அலிகான் மகன் இப்ராஹிம் அலிகான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு “திலர்” என தலைப்பு வைத்துள்ளார்களாம்.