Posted in

ஸ்கேன் ஆய்வில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தியில் உள்ள மனிதப் புதைகுழி வளாகத்தில், ஏற்கெனவே கண்டறியப்பட்ட இரண்டு புதைகுழிகளுக்கு அப்பால், மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதை அதிநவீன ஸ்கேன் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொள்ள, GPR (Ground-Penetrating Radar) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதி கிடைக்காததால், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போதுதான், பல இடங்களில் மனித எச்சங்கள் இருப்பதற்கான தெளிவான அடையாளங்கள் தெரிய வந்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சிக்குரிய தகவல்களுக்கு மத்தியில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் உட்பட ஒரு குழு, நேற்று  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தை நேரில் ஆய்வு செய்தது. இந்த விவகாரம் குறித்து உண்மையான தகவல்களை மட்டுமே அறிக்கையிட வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தையமுத்து தனராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Loading