பிரபாஸ் ஒரு சோம்பேறி…. திருமணம் செய்யாததற்கு காரணம் இதுதான்!

பிரபாஸ் ஒரு சோம்பேறி…. திருமணம் செய்யாததற்கு காரணம் இதுதான்!

மாபெரும் வரலாற்று திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் உலகப் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி உலகம் முழுக்க மாபெரும் வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்திருந்தது.

நடிகர் பிரபாஸ் முன்னதாக தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாகுபலி திரைப்படம் தான்.

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் இயக்குனர் ஆன ராஜமௌலி பேட்டி ஒன்றிய பிரபாஸ் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதாவது, “பிரபாஸ் ஒரு சோம்பேறி. ஒரு பெண்ணை கண்டுபிடித்து, அவரது பெற்றோரிடம் சென்று பேசுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்னும் திருமணம் செய்யவிலை என நினைக்கிறேன்” என ராஜமௌலி கூறி இருக்கிறார்.