சென்னையில் நடக்கும் தேர்தல் களம், தற்போது மிகவும் கீழ்த்தரமாகச் சென்று கொண்டிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்த நடுக்கத்தில், எங்கே தோற்று விடுவோமோ என ஸ்டாலின் அஞ்சுகிறார். 1.5 சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் பிரேமலதாவின் காலைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பிரேமலதாவுக்குப் பெரும் தொகையைக் கொடுத்துதான் முதல்வர் ஸ்டாலின் அவரைத் தன் கூட்டணியில் இணைத்துள்ளார். இதைப் பார்த்த வேல்முருகனும் திமுகவில் இணையப் பணம் கேட்டுள்ளார்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தேர்தல் செலவுக்கு திமுகவிடம் பணம் கேட்டுள்ளார். இதனை திமுக நிச்சயம் கொடுத்தாக வேண்டும்; இல்லையென்றால் விஜய்யின் TVK பக்கம் போய்விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, இரண்டு நாட்களுக்கு முன்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட இருந்த ஸ்டாலின், அதனை ஒரு நாள் தள்ளிவைத்தது ஏன் தெரியுமா? கலைஞர் சமாதிக்குச் சென்று அங்கே பட்டியலை வைத்து வணங்கிவிட்டு, நேராக அண்ணா அறிவாலயம் சென்று அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின்.
ஆனால், பிரேமலதா கேட்ட 3 தொகுதிகளையும் திமுக வேறு ஆட்களுக்குக் கொடுத்திருந்த விஷயம் பிரேமலதாவுக்குத் தெரிந்துவிட்டது. பட்டியலில் யார் யார் பெயர் உள்ளது என்பது அருகில் நின்ற துரைமுருகனுக்கே தெரியாது என்று அவர் தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். திமுக கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியாத ரகசியம் தேமுதிக பிரேமலதாவுக்குத் தெரிந்தது எப்படி? இதனால் அவர் நேரடியாகவே ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சனை தொடர்பாகப் பேச, அதில் மாற்றங்களைச் செய்யவே ஸ்டாலினுக்கு அந்த ஒரு நாள் தேவைப்பட்டுள்ளது.
துரைமுருகன், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? பிரேமலதாவுக்கு ஒரு சில வாக்குகள் தான் இருக்கிறது” என்று சொல்ல, உடனே முதல்வர் ஸ்டாலின், “அந்த ஒரு சில வாக்குகள் கூட இப்போது நமக்குத் தேவை” என்று கூறியுள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்ததால், சுமார் 20 ‘கொசுறு’ கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்து, போதாக்குறைக்கு அந்தக் கட்சியின் தலைவர்களுக்குப் பணம் கொடுத்து, தேர்தல் செலவையும் பார்த்துக் கொள்வதாக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இப்படி ஒரு நடுக்கத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. தேர்தலில் விஜய் வெற்றி பெறாமல் போனாலும், 23 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு 10 MLA-க்களைத் தன் வசம் வைத்திருந்தால் கூட, உடனே அடுத்த கட்ட அரசியல் நகர்வு ஆரம்பமாகிவிடும். அதன் பின்னர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சில வேளைகளில் திருமாவளவன் கூட TVK கட்சியோடு இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளன. திமுகவில் இணைய ராமதாஸ் கூடப் பணம் கேட்டுள்ளார்.
அப்படி என்றால், இந்த 20 சிறிய கட்சிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த பணம் மட்டுமே பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் போல இருக்கிறதே? இந்தத் தேர்தலில் திமுகவின் கஜானா காலியாகிவிடும் போலிருக்கிறது. ஒருவேளை இந்தத் தேர்தலில் வெல்லாவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துதான் ஸ்டாலின் இரவு பகலாகத் தூங்காமல் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் ஸ்டாலின் மருமகன் நடத்தும் “PEN” நிறுவனம் கடைசியாக நடத்திய கருத்துக் கணிப்புதான் திமுக கூடாரத்தையே அதிரவைத்துள்ளதாம். விஜய்யின் ஆதரவு மக்கள் மத்தியில் வெகுவாகப் பரவ ஆரம்பித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல்!