பிரித்தானியாவின் அதி நுட்ப்பம் வாய்ந்த வெடிக்காத Storm Shadow ஏவுகணையை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்

பிரித்தானியாவின் அதி நுட்ப்பம் வாய்ந்த வெடிக்காத Storm Shadow ஏவுகணையை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்

பிரித்தானியா தனது அதி சக்தி வாய்ந்த மற்றும் நுட்ப்பமாக தயாரிக்கப்பட்ட Storm Shadow என்ற ஏவுகணையை உக்ரைனுக்கு கொடுத்து இருந்தது. குறித்த ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் ரஷ்யா மீதும், ரஷ்ய ராணுவம் மீதும் கடும் தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் உக்ரைன் ஏவிய இந்த ஏவுகணையில் ஒன்று வெடிக்காமல் ரஷ்ய பகுதியில் விழுந்து விட்டது.

உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற ரஷ்ய ஆயுத விஞ்ஞானிகள் அதனைக் கைப்பற்றி, அது எவ்வாறு இயங்குகிறது, அதில் என்ன எல்லாம் பொருத்தப்பட்டுள்ளது என்று ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இந்தக் காட்சிகளை ரஷ்ய ஆயுதக் குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதனால் பிரித்தானிய டெக்னாலஜி தகவல் சில கசிந்து விட்டது என்பது உண்மை தான். மேலும் சாட்டலைட்டை சிக்னலைப் பாவித்து இயங்கும் இந்த ஏவுகணை எந்த பாதுகாப்பு சாட்டலைட்டை பாவிக்கிறது ? என்பது போன்ற விடையங்களை ரஷ்யா இனி அறிந்துகொள்ள வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

athirvu