அந்த நடிகையை கட்டிப்பிடிக்க தயங்கிய சூர்யா – பிரபலத்தின் பளீச் பேட்டி!

அந்த நடிகையை கட்டிப்பிடிக்க தயங்கிய சூர்யா – பிரபலத்தின் பளீச் பேட்டி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் சூர்யா முன்பொரு காலத்தில் நடிக்க வந்த புதிதில் அவருக்கு நடிக்கவே தெரியாதாம். சின்ன சின்ன ரொமான்டிக் காட்சிகளில் நடிக்க கூட மிகவும் தயங்குவாராம்.

குறிப்பாக ஹீரோயின்களுடன் நெருக்கமான ரொமான்டிக் காட்சியில் நடிக்கவே மிகவும் பதட்டப்படுவாராம். சூர்யாவின் அந்த நடிப்பை நேரில் இருந்து பார்த்த மறைந்த பிரபல நடிகரான மாரிமுத்து பேட்டி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நாம் ஒரு புதுமுக நடிகரை தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். நேருக்கு நேருக்கு படத்தில் நான் இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன்.

அந்தப் படத்தில் சூர்யா நடிப்பதற்கு ரொம்பவே தடுமாறினார். ஒரு காட்சியில் சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னார் வசந்த், ஆனால் சூர்யாவால் அது முடியவே இல்லை. அப்போது அவர் தயங்கி தயங்கி நடித்தார். ஒருகட்டத்தில் அது நடிப்பு என்பதை அவர் புரிந்துகொண்டு நடிக்க தொடங்கினார் என மாரிமுத்து கூறியுள்ள இந்த பழைய வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.