தமிழ் பெண் வேட்ப்பாளர் கிருஷ்ணி ரிஷி குமார் தேல்வியடைந்துள்ளார்- லிபரல் கட்சி வேட்ப்பாளர் வெற்றி !

தமிழ் பெண் வேட்ப்பாளர் கிருஷ்ணி ரிஷி குமார் தேல்வியடைந்துள்ளார்- லிபரல் கட்சி வேட்ப்பாளர் வெற்றி !

பிரித்தானியாவில் உள்ள சட்டன் நகரத்தில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட தமிழ் பெண் வேட்ப்பாளர், கிருஷ்ணி தோல்வியடைந்துள்ளார். குறித்த நகரம் லேபர் கட்சிக்கு ஆதரவான இடம் அல்ல. கடந்த தேர்தலில் கான்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. மேலும் சொல்லப் போனால், அது லிபரல் கட்சி சார்பான இடம். நடந்து முடிந்த 2024 தேர்தலில், இந்த இடத்தில் லிபரல் கட்சி பெரும் வெற்றியடைந்துள்ளது. 66% சத விகித மக்கள் வாக்குகளை செலுத்தியுள்ள நிலையில்.

72,302 பேர் இந்த இடத்தில் வாக்குகளை செலுத்த உரித்துடையவர்கள். லூக் டெயிலர்(லிபரல் கட்சி) 17,576 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். கான்சர் வேட்டிவ் கட்சி டாம் என்பவர் 13,775 வாக்குகளைப் பெற்றுள்ளார். கிருஷ்ணி 8,430 வாக்குகளைப் பெற்றுள்ளார். ரையன் பவல் என்பவர் 5,787 பெற்றுள்ளார். கிரீன் பார்டி 1,721, பெற்றுள்ளது. மொத்தமாக 47,000 வாக்குகளே பதிவாகியுள்ளது. ஆனால் 72,302 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இந்த இடத்தில் பல நூறு தமிழர்கள் இருக்கிறார்கள். இன்று கிருஷ்ணி அவர்கள் வெல்லவில்லை என்றால் , வாக்குகளை செலுத்தாத தமிழர்களே அதற்கு காரணம் என்றும் சொல்லலாம்.

எது எவ்வாறு இருப்பினும், மிகவும் கடுமையான போட்டி நிலவிய இடம் அது. குறிப்பாகச் சொல்லப் போனால் கிருஷ்ணி போட்டியிட்ட இடம் லேபர் கட்சிக்கு ஆதரவான இடம் இல்லை. இருப்பினும் கடந்த தேர்தலைக் காட்டிலும் +3.4% விகிதம் இம் முறை லேபர் கட்சி இந்த இடத்தில் முன்னேறியுள்ளது. அதற்கு கடுமையாக உழைத்த அனைவருக்கும் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள். அடுத்த தேர்தலிலும் தமிழர்கள் போட்டியிடுவார்கள். இது முடிவல்ல… ஆரம்பம் !

athirvu