Posted in

அறிவாலயத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணுகிறது: PMK கட்சியும் TVK உடன் இணையும்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், இன்று(28) கோவை சென்றபோது அவருக்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்து, ஸ்டாலினின் அறிவாலயமே ஆட்டம் கண்டுள்ளது. காரணம் செங்கோட்டையன் மட்டும் அல்ல… பாமர மக்கள் கட்சியோடு செங்கோட்டையன் கொண்டுள்ள நட்ப்பு தான். இதனால் PMK கட்சியினர்(அன்புமணி) விஜய் கட்சியோடு இணைய பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

EX MLA செங்கோட்டையனை வரவேற்க கோவை விமான நிலையத்தில் கூட்டம் கூடிய தொண்டர்கள் – TVK வலிமையின் பிரம்மாண்டத்தைக் காட்டியது. செங்கோட்டையனின் “யானை பலம் எங்களுக்கு கிடைச்சிருக்கு… கோவையில் 10 தொகுதிகளையும் ஜெயிப்போம்” என்ற வாக்குறுதியால் மேற்கு மாவட்டங்களில் TVK நிலைமை திடீரென மிகவும் வலுவடைந்துள்ளது.

செங்கோட்டையன் இணைவதால் வடமேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் TVK-க்கு பெரிய தளவாடம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த logical கூட்டணி PMK என பேசப்படுகிறது. விஜய்-அன்புமணி கூட்டணி உருவானால், வடகிழக்கு & வன்னியர் belt முழுவதும் TVKக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

செங்கோட்டையன் இணைப்பு, PMK திசை மாற்றம், இளைஞர்களின் ஆதரவு-இவை அனைத்தும் சேர்ந்து, 2026 தேர்தல் வெறும் போட்டி இல்ல, புதிய தலைமுறையின் vs பழைய அரசியல் என மாறிவிடும் என்ற சாத்தியத்தை காட்டுகிறது. TVK-வின் அடுத்த அறிவிப்புகள், கூட்டணிகள், மற்றும் மக்கள் சந்திப்புகள் தமிழக அரசியலில் பெரிய அலைகளை ஏற்படுத்தவிருக்கின்றன.