அ.தி.மு.க.விற்காக 50 ஆண்டுகள் உழைத்த செங்கோட்டையனை, ஒரு நொடியில் தூக்கி எறிந்து செல்லாக் காசாக மாற்றினார் எடப்பாடி பழனிசாமி. “இனி இவரால் என்ன செய்ய முடியும்? செங்கோட்டையன் ஒரு அரசியல் அநாதை” என்று நினைத்தார் எடப்பாடி. ஆனால், அந்த எண்ணங்கள் மறு நொடியே தவிடு பொடியாகிவிட்டன.
தவெக-வில் இணைந்த மறுநாளே எழுச்சி
நேற்று (நவம்பர் 27) செங்கோட்டையன் தவெக (TVK) கட்சியில் இணைந்த நிலையில், இன்று (நவம்பர் 28) அவர் தனது சொந்த மாவட்டமான கோவைக்குச் சென்றார். அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கே கூடியிருந்த மக்கள் வெள்ளத்தைக் கண்டு ஒரு கணம் திகைத்து நின்றார்.
சுமார் ஐந்து மணி நேரமாக மக்கள் அவருக்காகக் காத்திருந்தார்கள் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விடயம். தவெக கொடியுடன் இளைஞர்கள், பெண்கள் எனப் பல ஆயிரக்கணக்கானோர் அங்கே கூடி நின்று, செங்கோட்டையனுக்கு உற்சாகமான வரவேற்பை வழங்கியிருந்தனர்.
பின்னர் அவர் கோபிசெட்டிப்பாளையத்தில் நிகழ்த்திய உரை, தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு பெரும் எழுச்சி உரையாக அமைந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்த இந்த நிகழ்வை, தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான நிகழ்வாக மாற்றியது ஊடகங்களே.
எடப்பாடிக்கு ஏற்பட்ட நேரடிப் பாதிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேனல்களும் இந்த நிகழ்வைத்தான் நேரலை செய்து கொண்டிருந்தன. இன்று அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவரான எடப்பாடி பழனிசாமி என்ன பேசினாலும், அதை நேரலை செய்யத் தயாராக இல்லாத எந்த ஒரு தொலைக்காட்சிச் சேனலும் இல்லை. ஆனால், இன்று செங்கோட்டையன் நிகழ்வை எல்லாச் சேனல்களும் ஒளிபரப்பிய இந்த விடயத்தை எடப்பாடியால் தாங்கிக்கொள்ள முடியுமா தெரியவில்லை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு மிக முக்கியப் புள்ளியைப் பிடித்து, கட்சியில் இருந்து யாராவது நீக்குவார்களா? இதற்கான பலனை 2026-ஆம் ஆண்டு அ.தி.மு.க. நிச்சயம் உணரும் என்றுதான் கூற வேண்டும்.
ஏற்கனவே அ.தி.மு.க.-வின் வாக்குகளைத்தான் விஜய் உடைத்துத் தன் பக்கம் ஈர்த்து வரும் நிலையில், எடப்பாடி எடுத்த இந்த ஒரு முடிவு அவர் அரசியல் அஸ்தமனமாகும் அளவு செல்லக்கூடும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.