Posted in

விஜய்யின் வாக்கு வங்கி 35% விகிதமாக உயர்ந்தது எப்படி? உளவுத் துறையின் ஷாக்கிங் ரிப்போர்ட்

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வாக்கு வங்கி 26% விகிதத்தில் இருந்து சுமார் 35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, தமிழக உளவுத்துறை தி.மு.க.-விற்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

மக்கள் ஆதரவுக்கான காரணங்கள்

சமீபத்தில், ‘SIR’குக் எதிராக, TVK தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. இதில் விஜய் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், பெரும் அளவில் பொதுமக்கள் கூடி ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

  • இது போக, சுமார் 2 கோடி பெண்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 1,000/-ஐ முதல்வர் கொடுத்து வருகிறார். இருப்பினும், பெண்கள் ஆதரவு விஜய் பக்கம் திரும்பியுள்ளது என்ற தகவல், முதல்வரை திகைக்கச் செய்துள்ளது.  இளைஞர்கள் மற்றும் பெண்கள் செல்வாக்கு விஜய்க்கு அதிகரித்துள்ள நிலையில், தி.மு.க. ஆபத்தான கட்டத்தை நோக்கி நெருங்கி வருகிறது என்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம் இன்றி பெருகும் ஆதரவு

பிரச்சாரத்திற்குச் செல்லாமல் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் தங்கி இருந்தாலும், நாளுக்கு நாள் அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று பல கோணங்களில் தி.மு.க. ஆராய்ந்து வருகிறது.

  • இதற்கு முதல் காரணம் TVK கட்சியில் உள்ள தொழில்நுட்பப் பிரிவினர் தான் என்கிறார்கள். அவர்கள் சுமார் 2 முதல் 4 லட்சம் பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் நாள்தோறும் வெளியிடும் வீடியோக்கள், குறும்படங்கள், செய்திகள், போஸ்டர்கள் என்பன மக்கள் மத்தியில் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

  • இதேவேளை, குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் தி.மு.க. ஆதரவாளர்களாக இருந்தாலும், வீட்டில் மகன்/மகள் விஜய் ஆதரவாளராக இருந்தால், இயல்பாகவே அப்பாவும் அம்மாவும் மகன் அல்லது மகள் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்ற நிலையும் காணப்படுகிறது.

பெரும்பான்மை சாத்தியமா?

தமிழகச் சட்டமன்றத்தைப் பிடிக்கத் தேவையான 118 என்ற ‘மேஜிக் நம்பரை’ விஜய் எட்டி விட்டதாகச் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சில தெரிவிக்கின்றன. அவருக்கு ஏற்கனவே 120 தொகுதிகள் உறுதியாகக் கிடைக்கும் என்றும், விஜய் அவர்கள் எந்த ஒரு கட்சியோடும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்துகளும் தற்போது எழுகிறது.

இதனிடையே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAக்கள்), தற்போது TVK கட்சியில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே, தேர்தல் நெருங்க நெருங்க, பல கட்சித் தாவல்களை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். எனவே, 2026 தான் இதற்கான இறுதி பதிலைச் சொல்லவேண்டும்.