Source : https://kannanpages.blogspot.com/2025/11/140.html
12 billion light-years away. This cloud contains an estimated 140 trillion times the total water in Earth’s oceans.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவாக ஆரம்பித்தது. தூசுத் துகள்கள், பாறைகள் என்பன ஒன்றாகச் சேர ஆரம்பித்தன. அது பின்னர் தன்னைத்தானே சுற்ற ஆரம்பித்ததால் ஏற்பட்ட புவியீர்ப்பு விசை காரணமாக, அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பூமி ஈர்க்கத் தொடங்கியது. பூமியின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் ஈர்ப்பு விசையும் அதிகரிக்கும் என்பதே விஞ்ஞான கோட்பாடாகும். அதற்கு அமைவாகவே நமது சூரியக் குடும்பத்தில் சஞ்சரித்த பல பாறைகள், படிமங்கள், கனிமப் பொருட்களை பூமி தன் பால் இணைத்துக் கொண்டது.
இந்த வேளையில், பூமி மிகவும் வெப்பமாகக் காணப்பட்டதால் பாறைகள் உருகி மேலும் வலுச் சேர்த்தன. அந்த வேளையில் பூமியில் நீர் கிடையாது. ஆனால் அதன் பின்னரே, பூமிக்கு நீர் கிடைத்தது. தற்போது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், பூமியில் இருந்து 12 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு விண்வெளியில், சுமார் 140 டிரில்லியன் அளவு நீர் மேகங்களாக மாறி சஞ்சரிப்பதை அவதானித்துள்ளார்கள். அதாவது, பூமியில் உள்ள மொத்த நீரின் அளவு எவ்வளவோ, அதனை 140 டிரில்லியன் மடங்கால் பெருக்குகையில் எந்த அளவு இருக்குமோ, அந்த அளவு நீர் அந்த விண்வெளியில் உள்ளது.
குறிப்பிட்ட அந்த நீர் மேகம் நமது சூரியக் குடும்பத்தை நோக்கி வந்தால், நமது சூரியனே அணைந்துவிடும் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் பூமிக்குத் தேவையான அளவு நீர் மட்டும் பூமிக்கு எப்படி கிடைத்தது என்பது ஒரு பெரிய மர்மம்தான். சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் பூமியில் நீர் வந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதுவும் ஒரு விண்கல் பூமியில் வந்து விழுவது போல, ஒரு பெரும் நீர் மேகம் பூமிக்கு அருகே வர, புவியீர்ப்பு விசையால் அது பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. பின்னர் அது குளிர்ச்சியடைந்து பூமியில் விழுந்து நீராக மாறிவிட்டது.
இதனால் கடும் வெப்பம் நிலவி வந்த பூமி குளிர்ச்சியடையத் தொடங்கியது. பூமி செழித்தது. பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. பூமியில் உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. உயிர்களா? அது எப்படித் தோன்றியது என்பது மிக மிக விநோதமான ஒன்று. இந்த ஆதிகால மேகத்தில் இருந்த சில இரசாயனப் பொருட்கள் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். தற்போது உள்ள நீரில் கூட, அடிக்கடி மின்னல் தாக்கினால், சில நாட்களில் அதில் “சக்ஸீனிக் அமிலம்” (Succinic Acid) உருவாகிறது. இந்த அமிலமே உயிர்கள் தோன்ற மூல காரணமாக இருக்கலாம்.
இதன் மூலமாகவே கடல் அல்லது ஏரிகளில் தான் முதல் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். கடலில் அவை வாழ்ந்து பின்னர், தரையில் வாழப் பழகி இருக்க வேண்டும். அது சரி, இத்தனை உயிரினங்கள் தோன்றினாலும், மனிதர்கள் மட்டும் எப்படி இந்த அளவு வளர்ச்சி அடைந்தார்கள் என்று கேட்டால், அங்கேதான் பெரும் புதிர் உள்ளது. காரணம், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் நிராகரித்து பல ஆண்டுகள் ஆகிறது. உடும்பு இருந்தால், முதலை இருக்கிறது; பூனை இருந்தால் புலி இருக்கிறது; கழுதை இருந்தால் குதிரை இருக்கிறது. இப்படி அடுக்கிச் செல்லலாம். சிறிய மற்றும் பெரிய உருவம் கொண்ட, ஒத்த பல உயிரினங்கள் உலகில் உள்ளன. அது போலவே மனிதன் மற்றும் குரங்கு இனமும் இருக்கிறது.
ஆனால் மனிதன் மட்டும் பூமியில் இந்த அளவு வளர்ச்சியடையக் காரணம், மூளை. இதனால் இன்று வரை மனிதர்கள் பூமியில் தோன்றி இருந்தாலும், அவர்கள் வளர்ச்சிக்கு அவர்கள்தான் காரணம் என்பதனைப் பல விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வது இல்லை. இங்கேதான் ஏலியன் என்ற கோட்பாடு வருகிறது. நிச்சயமாக வேற்றுக்கிரக அறிவாற்றல் மிக்க ஒரு இனத்தால் நாம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்பதைப் பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் பூமிக்கு நீர் வேறு இடத்தில் இருந்து வந்தது, பூமியில் உள்ள கற்கள், இரசாயனப் பொருட்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவை. அது போலவே மனிதர்களும் இந்த பூமிக்குச் சொந்தக்காரர்கள் அல்ல என்பதே உண்மை.
சொல்லி வைத்தது போல, மனித இனம் தோன்றிய பின்னர், அவர்கள் வளர்ச்சி அடையும் கட்டத்தில் எப்படி நிலத்திற்கும் கடலுக்கு அடியிலும் கச்சா எண்ணெய் இருப்பது தெரிந்தது? கச்சா எண்ணெய் இல்லை என்றால் இன்று உலகம் எங்கே போயிருக்கும்? எப்படி நாம் வளர்ச்சியை எட்டியிருப்போம்? பூமியில் மனிதர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது, அது எப்படி என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்துப் பார்த்தது உண்டா? இல்லையே? சொல்லி வைத்தது போல எல்லாமே இருக்கிறதே, எப்படி? இது எல்லாமே அதிசயம் என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் நடக்க எப்படிச் சாத்தியம் உள்ளது என்று சற்று சந்தேகப்பட்டால், பல கேள்விகள் மனதில் எழும். அதற்கு விடை காண முடியாது.
ஏன் எனில், மனித மூளை அப்படியான ஒரு செயல்முறைக்குப் பழக்கப்பட்டு உள்ளது. மனிதன் எப்படித் தோன்றினான் என்ற விஷயத்தைக் கட்டுரையாக எழுதினால், வாசிக்க ஆர்வம் காட்டுபவர்கள் ஒரு சதவிகிதமாகக் கூட இருக்க மாட்டார்கள். அதுவே இன்று சினிமா பற்றிய செய்தி அல்லது உடலுறவு பற்றிய செய்திகளை வாசிக்க 80 சதவிகித மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இவை எல்லாமே இனப்பெருக்கம் சம்பந்தமானவை. இனத்தை பெருக்க வேண்டும் என்று நமது மூளையில் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றும் இந்த உலகில் நாமும் அதற்கேற்ப சுற்றித் திரிகிறோம் என்பதே உண்மை. ஆனால் இதனை ஏற்க மனிதரின் மனம் மறுக்கும்