2002ம் ஆண்டில் தான் முதலில் நடிகர் விஜய் அவர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே போர் மூண்டது. 2002ம் ஆண்டில் சென்னை மத்திய சிறைச்சாலைக் கைதிகள், தமக்கு கிருஸ்மஸ் திகதியில் மட்டன் பிரியாணி தேவை என்று கோரிக்கை வைக்க. சமூக சேவைகள் செய்து வந்த தேவலயத்தினர் தம்மால் 2,000 பேருக்கு மட்டன் பிரியாணி கொடுக்க பணம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். இந்தச் செய்தி விஜய் காதுக்கு எட்ட. நடிகர் விஜய் தானே தனது சொந்தப் பணத்தில் 2,000 கைதிகளுக்கு மட்டன் பிரியாணி கொடுத்தார். அதுமட்டும் அல்ல அவர் தானே அதனையும் பரிபாறி இருந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய சிறைக் காவல் உயர் அதிகாரி, DIG ராமச்சந்திரன், விஜயை புகழ்ந்து பேசியது மட்டும் அல்லாது அவர் MGR போல வருவார் என்றும் பாராட்டினார். இந்தச் செய்தி ஜெயலலிதா காதுக்குச் செல்ல, உடனே சீறிப் பாய்ந்த ஜெயலலிதா ராமச்சந்திரனை தண்ணி இல்லாத காட்டுக்கு இடம் மாற்றியதோடு மட்டும் அல்ல அவர் பார்வை, விஜய் பக்கம் திரும்பியது. வியஜ் ஒரு மாபெரும் சக்த்தியாக உரு எடுப்பார் என்பதனை 25 வருடங்களுக்கு முன்னரே கணித்து விட்டார் ஜெயலலிதா என்பதே உண்மை.
இதேவேளை குஜராத் பூகம்பத்திற்கு விஜய் கொடுத்த பணம், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சென்று பார்த்தது என்பது, ஜெயலலிதாவை எரிச்சல் அடைய வைத்தது. 2008ம் ஆண்டு ஈழப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விஜய் பேசியதோடு மட்டும் அல்லாது, ஈழப் போரை நிறுத்தக் கோரி பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு சொல்ல. சுமார் ஆயிரக் கணக்கில் தந்திகள் தமிழ் நாட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் சென்றது, டெல்லியை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இதனையும் ஜெயலலிதாவால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
விஜயின் தலைவா படத்தை தடை செய்த ஜெயலலிதா அரசு.
முன்னணி நடிகரான விஜயின் தலைவா படத்தை தமிழ் நாட்டில் வெளியிட விடாமல் நேரடியாக தடை செய்தது ஜெயலலிதா அரசு. அந்தப் படத்தில் வரும் சில விடையங்களை நீக்கவேண்டும் என்னு கோரி அவை அனைத்தையும் நீக்கிய பின்னரே தலைவா படம் ரிலீஸ் ஆனது பலர் அறிந்த விடையம். இந்த விடையமாக பேச, ஜெயலலிதாவின் கோடை நாடு எஸ்டேட்டுக்கு விஜய் சென்றும். வீட்டுக்கு உள்ளே இருந்த ஜெயலலிதா , விஜயை பார்க்க மறுத்துவிட்டார்.
பின்னர் வெளியாக இருந்த காவலன் படத்திற்கும் பெரும் பிரச்சனைகளை கொடுத்தது தமிழக அரசு. இதுவும் ஊர் அறிந்த விடையம். இதேவேளை 2011ம் ஆண்டு தேர்தலில், திமுக மற்றும் அதிமுக சரி நிகர் பலமாக இருந்தது. இதனால் ஜெயலலிதா தான் தோற்றுப் போவேன் என்று அஞ்சினார். உடனே விஜய் அப்பாவுக்கு தூது ஒன்றை அனுப்பினார். 2011ம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் அவர்கள், அதிமுக வை ஆதரிக்கவேண்டும். அதனை அவர் வெளிப்படையாக பேச வேண்டும் என்று ஜெயலலிதா வற்புறுத்தினார்.
அப்படி நாங்கள் உங்களை ஆதரித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்ப, விஜய் படங்களுக்கு இனி எந்த ஒரு தடையும் விதிக்க மாட்டோம் என்று ஜெயலலிதா வாக்கு கொடுத்தார். இதனால் 2011ம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், எல்லா மாவட்டங்களிலும் இறங்கி வேலை செய்தது. அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கம் செயல்படத் தொடங்கியது. இதன் காரணத்தால் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார் செல்வி ஜெயலலிதா. இதனை சீமான் அவர்கள், குறிப்பிடுகையில், ஆட்சி மாற்றத்தை உண்டாக்கி விட்டு அமைதியாக இருக்கிறார் தம்பி விஜய் என்று குறிப்பிட்டார்.
2011ல் தானே புயல் கடலூரை தாக்கிய வேளை, நேரில் சென்று கொட்டும் மழையில் அரிசி வழங்கினார் விஜய். அதுவும் விஜய் படங்களில் மக்கள் கூடிய கூட்டமும் ஜெயலலிதாவை மீண்டும் கிலி கொள்ள வைத்தது.
கொடுத்த வாக்கை மீறினார் ஜெயலலிதா:
2012ம் ஆண்டு வெளியாக இருந்த, துப்பாக்கி படத்திற்கு பிரச்சனை கொடுத்தார். வெளியிட முடியாதவாறு முடக்கினார். அதன் பின்னர் 2013ம் ஆண்டு கத்திப் படத்திற்கு வேல் முருகனை தூண்டி விட்டு , தமிழ் நாட்டில் போராட்டங்களை நடத்தி கத்தி படத்தை வெளியிட கூடாது என்று பல சிக்கல்களை கொடுத்தது அதிமுக அரசு. அதன் பின்னர் 2016ம் ஆண்டு தெறி படத்திற்கு இதே கதி தான். இப்படி நடிகர் விஜயை திமுக அரசு மற்றும் அதிமுக அரசு மாறி மாறி பழிவாங்கி வந்துள்ளதே தவிர, எப்பொழுதும் அவரை ஒரு நடிகராக பார்கவில்லை. அவரை திமுக மற்றும் அதிமுக அரசுகளே அரசியலுக்கு இழுத்து வந்தது என்று தான் சொல்லவேண்டும்.
விஜயின் ஆதரவைப் பெற்று முதலமைச்சரான செல்வி ஜெயலலிதா , இறுதியில் விஜய்க்கு என்ன செய்தார் என்பது ஊர் அறிந்த உண்மை. இந்த நிலையில் மீண்டும் சென்று அதிமுக வோடு இணைந்து, எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கவா , விஜய் கட்சி ஆரம்பித்து கோடி கோடியாக செலவு செய்கிறார் ? விஜய் எடுத்திருக்கும் முடிவு மிகவும் காத்திரமானது. தனித்து போட்டியிடுவது. எங்களோடு எந்தக் கட்சி இணைந்தாலும் அவர்களை வரவேற்ப்பது. ஆனால் முதலமைச்சர் வேட்ப்பாளர் விஜய் தான். 2026 தேர்தலில் விஜய் வென்றால், அவர் முதலமைச்சர், இல்லையென்றால் எதிர்கட்சி தலைவராக இருப்பார். என்பது உறுதி. ஏன் என்றால் திமுக பெரும் பின்னடைவை சந்திக்கும் என்பது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது.