சில தினங்களுக்கு முன்னர் சீமான் மேடையில் பேசும்போது விஜய்யை மிகவும் தரக்குறைவாகப் பேசிய வேளையில்… கூட்டத்தில் நின்ற இளைஞர் ஒருவர் “போடா… தேவடியாப் பயலே” என்று கூச்சல் இட, அது சீமானுக்குக் கேட்க, அவரே வாய் அடைத்துப் போய் சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்தார். இது தேவையா ?
CHENNAI: 19-11-2025
2009ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்த பின்னர், தலைவர் பிரபாகரனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி அரசியலுக்குள் பிரவேசித்தவர் அண்ணன் சீமான். ஆரம்பத்தில், ‘தமிழர்களே தமிழ்நாட்டை ஆளவேண்டும், தெலுங்கர்கள் அல்ல‘ என்று கூறி, திராவிடக் கொள்கையை எதிர்த்தார். மேலும், திராவிடர்கள் என்று ஒரு இனம் கிடையாது என்று அடித்துப் பேசினார். புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அவர் வெளிப்படையாகக் கூறினார்.
இதனால் ஈழத் தமிழர்கள் பலர் அவர் பக்கம் சாய, அண்ணன் சீமான் அவர்கள் பல வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று வந்தார். தமிழ்நாட்டில் படிப்படியாக முன்னேறிய நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தலில் சுமார் 8% சதவீத வாக்குகளை (அதாவது 33 லட்சம் வாக்குகளை) பெற்றுள்ளது. அத்தோடு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி மாறியது. இதுவரை சரியாகப் பயணித்த சீமான், கடந்த இரண்டு வருடங்களாகப் பாதை மாறி, எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் பயணிப்பது, அவரைப் பின்தொடரும் மக்களையும் குழப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர், TVK கட்சியோடு இணைய சீமான் விருப்பம் தெரிவித்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை TVK நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, இளைஞர்களின் வாக்குகள் அப்படியே விஜய் பக்கம் சாய்வதைக் கண்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளான சீமான், திராவிடக் கட்சிகளின் எதிர்ப்பை விட்டுவிட்டு, தற்போது விஜய் எதிர்ப்பைக் கையில் எடுத்துள்ளார். அவர் தனது கொள்கை மற்றும் கோட்பாடுகளிலிருந்து மாறிவிட்டதாகப் பலர் தற்போது கருதுகிறார்கள்.
ஆனால், தி.மு.க-வுக்கு மிக நெருக்கமானவர்கள் கருத்து தெரிவிக்கையில், அண்ணன் சீமான் எப்பொழுது முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்தாரோ அன்று முதல் அவர் மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள். அன்று முதல் இன்று வரை, சீமான் தி.மு.க-வை எதிர்க்கவில்லை. இதுவரை காலமும் கடுமையாக எதிர்த்து வந்த சீமான் அவர்கள் தற்போது ‘கப்சிப்’ என்று ஆகிவிட்டார். மாறாக, தி.மு.க-வுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் விஜய்யை எதிர்க்கத் தொடங்கியுள்ளார். அண்ணன் சீமான் எப்போது பாதை மாறினார் என்பது தெரியவில்லை.
தமிழ் தேசியம், ஹிந்தி எதிர்ப்பு, திராவிடத்தை ஒழிப்பது, தமிழர்களே தமிழ்நாட்டை ஆட்சி செய்வது என்ற உயரிய கொள்கைகளோடு களமிறங்கிய அண்ணன் சீமான் இன்று நடத்தும் அரசியல் என்ன? விஜய் எதிர்ப்பு அரசியல் மட்டும்தான். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது பத்திரிகையாளர்களைச் சந்தித்து, விஜய் தொடர்பாக அவதூறு பேசுவதே சீமான் குலத்தொழிலாக மாறிவிட்டது. ஈழத் தமிழர்கள் தொடர்பாக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒரு வார்த்தை பேசியுள்ளாரா என்று கேட்டால், ஒன்றுமே இல்லை.
உயரிய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளோடு அரசியலுக்குள் பிரவேசித்து, இன்று ஒரு நடிகரைப் பார்த்து அச்சம் கொண்டு, தனது பாதையை விட்டு விலகி, அரசியல் தெளிவை இழந்து இருக்கும் சீமான் தலைமையில் தான் ஈழத் தமிழர்களும் தமிழகத் தொப்புள் கொடி உறவுகளும் இருக்க விரும்புகிறார்களா என்று கேட்டால், விடை ‘அது அல்ல’. மேலும், நாம் தமிழர் கட்சி தற்போது தி.மு.க-வின் ‘பி டீம்’ என்று சொல்லும் அளவுக்கு அவர் நிலை உள்ளது. இறுதியாகச் சில தினங்களுக்கு முன்னர் அவர் மேடையில் பேசும்போது விஜய்யை மிகவும் தரக்குறைவாகப் பேசிய வேளையில், கூட்டத்தில் நின்ற இளைஞர் ஒருவர் “போடா… தேவடியாப் பயலே” என்று கூச்சல் இட, அது சீமானுக்குக் கேட்க, அவரே வாய் அடைத்துப் போய் சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்தார்.
தமிழக அரசியலில் விஜய் வரலாம், நாளை அஜித் வரலாம் ஏன் சிவகார்த்திகேயன் கூட வரலாம். யார் வந்தால் என்ன? எமது கொள்கை மற்றும் கோட்பாட்டை நம்பி 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். எனவே, அதனை உறுதியாகக் கொண்டு சென்றாலே போதும். ஆனால், இன்றைய நிலையில் சீமான் மிகவும் மாறிவிட்டார். ஒரு பக்கா சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பதே உண்மை. இனியும் இவரை நம்ப முடியுமா என்ற பெரும் கேள்விகள் ஈழ மக்கள் மனதில் மட்டுமல்ல, தமிழக மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. இதனை 2026ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் மிகத் துல்லியமாக எமக்கு உணர்த்தும்.
அதிர்வு இணையத்திற்காக
கண்ணன்.