Posted in

அமெரிக்கத் துணைத் தூதர் விஜய்யைச் சந்திக்க விருப்பம்: டெல்லி சம்மதம் கொடுக்குமா?

தமிழ்நாட்டில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரி (Consul General), தமிழர் வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இந்தச் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

விஜய்க்கு திரளும் மக்கள் கூட்டம் தொடர்பாகவும், அவர் அடுத்து முதலமைச்சராக வரக்கூடும் என்ற வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அவருடைய கொள்கைகள் குறித்து ஆராயவே இந்தச் சந்திப்பு என்று பலவாறாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

பொதுவாக, அமெரிக்கா எந்த நாட்டில் தனது தூதரகம் இருந்தாலும், அதன்மூலம் அந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை அறிந்துகொள்வது வழக்கம். அதற்காக அமெரிக்கா பிரத்தியேகமாக ‘செக்யூர்-வயர்’ (Secure-Wire) என்ற தகவல்தொடர்பு சாதனத்தை வைத்திருக்கிறது. இவை ஒவ்வொரு தூதரகத்திலும் உள்ளது. மேலும் சொல்லப்போனால், தமது தூதரகத்திற்கு ஏதாவது ஆபத்து என்றால், கடல் மூலமாகத் தனது படைகளை அனுப்பி, அங்கிருந்து தூதரக அதிகாரிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஏதுவான ஒரு இடத்தையே அமெரிக்கா தேர்வும் செய்கிறது.

உள்நாட்டு விஷயங்களில் தாம் கவனம் செலுத்துவது இல்லை என்று தொடர்ந்து கூறிவரும் அமெரிக்கா, பல உள்நாட்டு விஷயங்களில் அடிக்கடி தலையிடுவது வழக்கம். ஒரு நாட்டில் அங்குள்ள ஒரு மாநிலத்தில் என்ன நடந்தாலும், அந்தச் சம்பவத்தை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நிச்சயம் தமது தலைமைக்கு உடனுக்குடன் அனுப்பி வைப்பார்கள். அந்த வகையில் அமெரிக்காவை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது கரூர் சம்பவம்.

எனவே, நிச்சயம் TVK தலைவர் விஜய் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்திருக்கும். அவருக்கு இருக்கும் செல்வாக்கு என்ன? வெற்றி பெறுவாரா இல்லையா என்பது தொடர்பாகவும், நிச்சயம் சென்னையிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் ஒரு அறிக்கையைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி இருப்பார்கள். ஆனால், அமெரிக்கத் தூதரக அதிகாரியே விஜய்யைச் சந்திக்க உள்ளார் என்று வெளியாகியுள்ள செய்திகளில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்று கூறப்படுகிறது.