Posted in

உதய நிதியின் Birthday காலி செய்த விஜய்: திட்டம் தீட்டி போட்டுத் தள்ளியது எப்படி ?

உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மண்ணைத் தூவிய விஜய்: செங்கோட்டையன் இணைப்பு வியூகம்:

தமிழக துணை முதலமைச்சராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினம் இன்றுதான் (நவம்பர் 27). அன்றைய தினம் ஆளும் தி.மு.க. அரசு, பல உதவித் திட்டங்களை அறிவித்து, அதனை ஒரு பெரிய நாளாக மாற்றி, ஊடகங்களின் உதவியோடு பிரமாண்டமாக ஏற்பாடுகளை செய்து வந்தது. வருங்கால முதலமைச்சர் அல்லவா, அதனால் அவர் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அந்தத் திட்டத்தில் மண்ணை அள்ளித் தூவியுள்ளார் தவெக (TVK) தலைவர் விஜய்.

விஜய்யின் திட்டமிட்ட அரசியல் நகர்வு

“குறி வைத்தால் விட மாட்டேன், விழாது என்று தெரிந்தால் குறி வைக்க மாட்டேன்” என்று கூறியது போலவே விஜய் இந்தத் திட்டத்தை வகுத்துள்ளார். அதாவது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைவது என்பது பல நாட்களுக்கு முன்னரே முடிவாகிவிட்டது. ஆனால், அவரை நவம்பர் 27-ஆம் தேதி கட்சியில் இணையுமாறு விஜய் கூறியுள்ளார்.

செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்தால், அதுதான் அன்றைய தினத்தின் முக்கியச் செய்தியாக (Breaking News) இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேனல்களும் இதுபற்றித்தான் பேசும். இதனால், உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டச் செய்திகள் அடிபட்டுப் போகும் என்று விஜய் கணக்கு போட்டுள்ளார்.

தி.மு.க. போட்ட அனைத்துத் திட்டங்களிலும் மண்ணை அள்ளித் தூவியுள்ளார் விஜய். இதுவே ஒரு பெரும் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

தி.மு.க. அமைச்சர்களின் கெஞ்சலும் செங்கோட்டையனின் இணைப்பும்

பல தி.மு.க. அமைச்சர்கள் செங்கோட்டையனுக்குத் தொலைபேசி (Phone) போட்டு, “27-ஆம் தேதி இணைய வேண்டாம், 26 அல்லது 28-ஆம் தேதி இணையுங்கள்; எங்கள் உதயின் பிறந்தநாள் 27-ஆம் தேதி” என்று கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் செங்கோட்டையன், விஜய் போட்ட திட்டத்தின்படி 27-ஆம் தேதி தவெக கட்சியில் இணைந்துள்ளதோடு, பல முக்கிய அ.தி.மு.க. உறுப்பினர்களையும் விஜய் கட்சியில் இணைத்துள்ளார்.

இதன் மூலம் அவர் ஒரு முக்கியத் தகவலை அ.தி.மு.க.வுக்குத் தெரிவித்துள்ளார். எந்த வகையிலும் அ.தி.மு.க.வுடன் தவெக கட்சி இணையப் போவது இல்லை. மேலும் சொல்லப்போனால், அ.தி.மு.க.-வை பலம் இழக்கச் செய்து, தற்போது அவர் கூறி வந்ததுபோல, தி.மு.க. மற்றும் தவெக-க்கு இடையேதான் போட்டி என்ற நிலையை உருவாக்கியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் நல்ல செல்வாக்கில் உள்ள செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்தால், கொங்கு மண்டலத்தில் தவெக கட்சி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.