சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் ‘World Economic Forum‘ மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் தனது அடுத்த அதிரடி மூவ் (Move) என்ன என்பதை உடைத்துப் பேசியுள்ளார். கடந்த சில நாட்களாக கிரீன்லாந்தை ராணுவ பலம் கொண்டு அமெரிக்கா பிடிக்குமோ என்ற பயம் ஐரோப்பிய நாடுகளிடையே இருந்தது. ஆனால், “நாங்கள் மிலிட்டரி போர்ஸ் (Military force) எதையும் பயன்படுத்தப் போவதில்லை, ஓகே-வா?” என்று டிரம்ப் சொன்னதும் அரங்கமே ஒரு நிமிடம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனா, அவர் அத்தோட நிறுத்தல, “மனசு வச்சா எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஆனா இப்போதைக்கு அமைதியா போறோம்” என தனது ஸ்டைலில் ஒரு பஞ்ச் வைத்தார்.
டிரம்ப் பேசும்போது, “அந்த ஐலண்ட் (Island) ஒரு வெறும் பனிக்கட்டி மாதிரி இருக்கலாம், ஆனா செக்யூரிட்டி விஷயத்துல அது ரொம்ப முக்கியம்” என்று அழுத்திச் சொன்னார். லீசுக்கு (Lease) எடுப்பதெல்லாம் செட்டாகாது, ‘Full Ownership’ அதாவது முழு உரிமை இருந்தால் தான் அதை ஒழுங்காகப் பாதுகாக்க முடியும் என்பது டிரம்பின் வாதம். அங்கு ஒரு மிகப்பெரிய ‘Golden Dome‘ ஏவுகணை பாதுகாப்பு அமைப்பைக் கட்டப்போவதாகவும் அவர் பிளான் போட்டுள்ளார். “எல்லாரும் சமத்தா கிரீன்லாந்தை எங்ககிட்ட கொடுத்துடுங்க, இல்லைன்னா நாங்க அதை நியாபகம் வச்சிருப்போம் (We will remember)” என மறைமுகமாக மிரட்டலும் விடுத்தார்.
தனது ஸ்பீச்சில் (Speech) ஹிஸ்டரி பாடமெடுத்த டிரம்ப், “இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா மட்டும் இல்லைன்னா, நீங்க எல்லாரும் இப்போ ஜெர்மன் மொழியும், கொஞ்சம் ஜப்பானீஸ் மொழியும் தான் பேசிட்டு இருப்பீங்க” என ஐரோப்பிய லீடர்களைப் பார்த்து செம ஓட்டு ஓட்டினார். போருக்குப் பிறகு கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் திருப்பிக் கொடுத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றும், இப்போது அவர்கள் நன்றியில்லாமல் (Ungrateful) நடப்பதாகவும் அவர் கடுமையாகச் சாடினார். “நாங்கள் கேட்பது ஒரு சின்ன பனிக்கட்டி தான், அதுக்காகப் போய் இவ்வளவு சீன் போடுறீங்களே” என கிண்டலாகப் பேசினார்.
இந்த கிரீன்லாந்து மேட்டருக்காக டென்மார்க் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% டேரிஃப் (Tariffs) அதாவது வரியை விதிக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகப் பங்குச் சந்தைகள் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளன. ஆனாலும் டிரம்ப் தனது பிடியில் உறுதியாக இருக்கிறார். “அமெரிக்காவால மட்டும் தான் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியும், வேற யாராலும் முடியாது” என டாவோஸ் மேடையில் கெத்தாகப் பேசி முடித்தார். டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்துதான் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும்.