யாரும் அசைக்க முடியாத இடத்தில் விஜய்: திண்டாடி தெருப் பொறுக்கும் திமுக !

யாரும் அசைக்க முடியாத இடத்தில் விஜய்: திண்டாடி தெருப் பொறுக்கும் திமுக !

தி.மு.க.வால் விஜய்யை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக நிரூபணமாகியுள்ளது. கரூர் சம்பவம், அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அனைத்துத் திட்டங்களையும், விஜய் ஒரே ஒரு வழக்கின் மூலம் உடைத்து, தவிடுபொடி ஆக்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் () தொடுத்த வழக்கு, அவர்களுக்குச் சாதகமாக வந்துள்ள நிலையில், தற்போது விஜய் அவர்கள், மீண்டும் கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் வெளிப்பட்ட ஈகோ!

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று அறிக்கை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் எந்த ஒரு இடத்தில் கூட அவர் “விஜய்” என்ற பெயரையோ அல்லது என்ற பெயரையோ உச்சரிக்கவே இல்லை. அந்த அளவுக்கு ஸ்டாலினுக்குள் காழ்ப்புணர்ச்சி உள்ளதோடு, ஒரு ஈகோவும் உள்ளது. “இவன் பெயரை நான் ஏன் பேச வேண்டும்?” என்ற எகத்தாளம் அதில் வெளிப்பட்டது.

கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை காலி செய்து விடலாம் என்று பெரும் கணக்குப் போட்ட ஸ்டாலினுக்கு, தற்போது இடி மேல் இடி விழுந்து வருகிறது என்பதே உண்மை நிலவரம். “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எப்படி விஜய் தொடர்பாக விமர்சனம் வைக்கலாம்?”, “எப்படி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போடப்பட்டது?” என்று அடுத்தடுத்துக் கேள்விகளை எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசு விஜய்க்கு அநீதி இழைக்கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டது.

ஓங்கியுள்ள விஜய்யின் கை: உற்சாகத்தில் தொண்டர்கள்

இதனால் விஜய்யின் கை தற்போது ஓங்கியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புத்துணர்ச்சி பெற்று, பொங்கி எழுந்துள்ளார்கள். விஜய் மீண்டும் கரூர் செல்வது பெரும் நிகழ்வாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 27% சதவீத வாக்குகளை விஜய் அவர்கள் பெறுவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறினாலும், சுமார் 32% சதவீத வாக்குகளைப் பெற்று, சிறிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க விஜய்யால் முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

இதனால் தான் காங்கிரஸ் கட்சியாகட்டும், பா.ஜ.க. (BJP) கட்சியாக இருந்தாலும் சரி, விஜய்யை வளைத்து போட்டு விட வேண்டும் என்று வரிசை கட்டி நிற்கிறார்கள். தற்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய தேசிய அரசியலிலும் விஜய் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading