தளபதி-69 : விஜய்யை இயக்கும் அஜித் பட இயக்குநர்?

தளபதி-69 : விஜய்யை இயக்கும் அஜித் பட இயக்குநர்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில், நடிகர் விஜய்,தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து, மக்களவை தேர்தல் அல்ல, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத்தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிக்கைவெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இவரது கடைசி படமான விஜய்69 படத்தை யார் இயக்குவார் ? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சதுரங்கவேட்டை, தீரம் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி ஹெச்.வினோத் விஜய்யின் 69வது மற்றும் கடைசி படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.

அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி: ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்
Read more

விரைவில் இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.