எனக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு இது தான் காரணம் – திரிஷா!

எனக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு இது தான் காரணம் – திரிஷா!

தென்னிந்திய சின்ன மாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளாக இருந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா இவர்கள் இருவருமே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து அதில் பல வெற்றிகளையும் குவித்து வருகிறார்கள்.

இருவரும் 40 வயதாகியும் இன்னும் மார்க்கெட்டின் உச்சத்தில் நட்சத்திர அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை திரிஷா பேட்டியொன்றில் , எனக்கும் நயன்தாராவுக்கும் இடையே தவறான புரிதல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அது தொழில் காரணங்களால் அல்ல, அது தனிப்பட்ட காரணம்.

இதனால் சிறிது காலம் பேசாமல் இருந்தோம் என்று கூறியிருந்தார். இது பற்றி பேசிய நயன்தாரா, கருத்து வேறுபாட்டுக்கு பின் சமரசம் செய்ய, திரிஷா என்னை முதலில் அணுகினார். இதையடுத்து நாங்கள் பேச தொடங்கினோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திரிஷாவின் இந்த நல்ல குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

athirvu