அந்த நடிகையுடன் கள்ளக்காதல்… முதல் மனைவியை விவாகரத்து செய்த சரத்குமார்!

அந்த நடிகையுடன் கள்ளக்காதல்… முதல் மனைவியை விவாகரத்து செய்த சரத்குமார்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகராக நட்சத்திர அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் சரத்குமார் . இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தார்.

இவரது நடிப்பில் வெளியான சேரன் பாண்டியன், நட்புக்காக, சூரியவம்சம், நாட்டாமை, ஐயா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக இவருக்கு அமைந்ததோடு பல விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகராக பார்க்கப்பட்டார்.

நடிகர் சரத்குமார் கடந்த. 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் . மனைவியுடன் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக வாழ்ந்து வந்த சரத்குமார் நடிகை நக்மாவுடன் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாகவும் தனிமையில் வாழ்ந்த வந்ததாகவும் அப்போதே செய்திகள் வெளியாகியது .

இதனால் மனைவி சாயாதேவி சரத்குமார் உடன் மனம் முறிவு ஏற்பட்டு கடந்த 2000 ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதை எடுத்து நக்மா ரசிகர்களால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார். நக்மாவால்தான் சாயாதேவியை விவாகரத்து செய்தார் சரத்குமார் என பலரும் திட்டியதால் நக்மா அவருடனான காதலை முறித்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார். அதன் பிறகு சரத்குமார் மீண்டும் நடிகர் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.