Posted in

TN2026: விஜயை வச்சு ‘கல்லா’ கட்ட பார்த்தாங்களா இல்ல ‘ஓட்ட’ கட்ட பார்த்தாங்களா ?

📅 வெளியானது: April 12, 2026

இயக்குநர் உமாமதி ராமன் இயக்கத்துல நட்டி, தம்பி ராமையா நடிச்சு ரிலீஸ் ஆகியிருக்கற இந்த ‘TN 2026’ படத்தோட கதைய கேட்டீங்கன்னா, “என்னப்பா இது மொக்கை குஷ்பூ கதையா இருக்கு”ன்னு கேப்பீங்க. 1000 ஏக்கர் ஜமீன்தாரான தம்பி ராமையா, ஒரு வளந்து வர்ற ஹீரோவை (எம்ஜிஆர் ரசிகர் வேற!) கூட்டிட்டு வந்து, “நீதான் அடுத்த எம்ஜிஆர்”னு சொல்லி அவன பெரிய ஆளாக்கி, அரசியல்ல வச்சு நல்லா ‘மீட்டர்’ போடலாம்னு ப்ளான் பண்றாராம். ஆனா படத்த பார்த்தா, “இது என்னடா படமா இல்ல பழைய உபமாவா?”ன்னு கேக்கற அளவுக்கு படு மோசமான மேக்கிங்ல உயிர வாங்குறாங்க.

ட்ரைலர் வந்தப்பவே “ஏப்பா இது நம்ம தளபதி விஜயையும் அவர் அரசியலையும் வச்சு செஞ்சிருக்கீங்களேடா”ன்னு சோசியல் மீடியா ஃபுல்லா பத்திக்கிட்டு எரிஞ்சுது. ஆனா படக்குழுவோ, “ஐயயோ… நாங்க விஜய பத்தி ஒண்ணுமே சொல்லலையே, அவர் மேல எங்களுக்கு அவ்ளோ மரியாதை”ன்னு செமயா எஸ்கேப் ஆனாங்க. ஆனா தியேட்டர்ல போய் பார்த்தா, ஹீரோ அச்சு அசலா விஜய் மாதிரியே ட்ரெஸ் பண்ணிட்டு வர்றாரு, அவர் பாடி லாங்குவேஜ்லயே பேசுறாரு. கடைசியில ‘ஜனநாயகன்’ படப் பிரச்சனை, த்ரிஷா மேட்டர்னு எதையும் விடாம மேம்போக்கா தொட்டுட்டு போயிருக்காங்க.

படத்த ஒன்னு ஸ்பூப் (Spoof) படமா எடுத்து சிரிக்க வச்சிருக்கணும், இல்லன்னா உருப்படியா ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லரா எடுத்திருக்கணும். இத விட்டுட்டு, விஜய வச்சு காசு பாக்கலாம்ன்ற ஒரே எண்ணத்துல, எதையோ எடுத்து வச்சு கும்மாங்குத்து குத்தி அனுப்பிட்டாங்க. பெர்பெக்ஷன் கிடையாது, டீடைலிங் கிடையாது – மொத்தத்துல படம் ‘மஸ்ட்’ (Must) கிடையாது, வெறும் ‘வேஸ்ட்’. தியேட்டருக்குப் போனவங்க எல்லாம் “ஏண்டா வந்தோம்”னு தலையில அடிச்சுட்டு வெளிய வர்றாங்க.