வில்லியத்தின் மனைவி கேட்-மிடில்டன் medical records பார்க முனைந்த 3 பேர் மீது பொலிஸ் விசாரணை !

வில்லியத்தின் மனைவி கேட்-மிடில்டன் medical records பார்க முனைந்த 3 பேர் மீது பொலிஸ் விசாரணை !

இளவரசரும் மன்னர் சார்ளசின் மூத்த மகனுமான, வில்லியம் அவர்களின் மனைவிக்கு, சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார். இவருக்கு என்ன நோய் என்பது தொடர்பாக சரியான விளக்கம் எதுவும் அரன்மனை வட்டாரங்களால் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மீடியாக்கள் பல கேட் மிடில்டனுக்கு என்ன நோய் வந்தது என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

இன் நிலையில் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 பேரை நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. குறித்த 3 நபர்களும், கேட் மிடில்டனின் மெடிகல் ரக்காட்டை பார்க்க முனைந்து இருக்கிறார்கள். இதேவேளை இந்த மருத்துவமனையில் தான் மன்னர் சார்ளஸ்சும் புரோஸ்டேட் கேன்சருக்கு சிகிச்சை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

சில மாதங்களுக்கு முன்னர் வில்லியம் மனைவி கேட் மிடில்டனுக்கு வயிற்றில் ஒரு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றுவரை அது என்ன சிகிச்சை என்பது மர்மமாகவே உள்ளது. இதனால் ஏதோ ஒரு மீடியா, குறித்த நபர்களை அணுகி கேட் மிடில்டன் மெடிக்கல் தரவுகளை ஆராந்து சொல்லுமாறு கேட்டுள்ளது. இதன் காரணத்தால் தான் இவர்கள் இளவரசியின் பைலை கம்பியூட்டரில் திறக்க முயற்ச்சி செய்துள்ளார்கள். தற்போது மெற்றோ பொலிடன் பொலிசார் இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.