லண்டன் பாலத்தில் 2 சூட் கேசில் வெட்டப்பட்ட மனித உடல்கள்- திகைத்துப் போன பொலிசார் !

லண்டன் பாலத்தில் 2 சூட் கேசில் வெட்டப்பட்ட மனித உடல்கள்- திகைத்துப் போன பொலிசார் !

பிரித்தானியாவின் புகழ்வாய்ந்த கிளிப்ஃடன் பாலத்தில், 2 சூட் கேசுக்கு உள்ளே, வெட்டப்பட்ட மனிதப் பாகங்கள் இருப்பதை கண்ட பொலிசார் அதிர்ந்து போனார்கள். இன்று அதிகாலை பொலிசாருக்கு அவசர அழைப்பு(999) ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் மிகவும் பதற்றமாக பேசியுள்ளார். பாலத்தில் 2 சூட் கேஸ் இருப்பதாகவும் அதில் ஒன்றில் இருந்து ரத்தம் வழிவதாகவும் அவர் கூறினார். இதனை அடுத்து பொலிசார் விரைந்து சென்றார்கள்.

பாலத்தின் போக்குவரத்தை முடக்கிய பொலிசார், உடனே தடயவியல் நிபுனர்களை களத்திற்கு வரவளைத்தார்கள். சூட் கேசை திறந்தால், சிறிய சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் ஒன்று கிடந்துள்ளது. கை வேறாக கால்கள் வேறாக இருப்பதை பார்த்த பொலிசார் திணறிப் போனார்கள். இது ஒரு உடல் தானா இல்லை 2 உடல்களா என்பது பெரும் சந்தேகமாக உள்ள நிலையில்.

இந்த சூட் கேசை யார் கொண்டு வந்து போட்டார்கள் என்று கண்டறிய பொலிசார் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார்கள். அருகே உள்ள அனைத்து CCTV பதிவுகளை பார்க்க பொலிசார் பெரும் விசாரணைகளை முடிக்கி விட்டுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது. இச் சம்பவத்தால் கிளிப்ஃடன் பகுதியே அதிர்ந்துபோய் உள்ளது. பிரித்தானியா வர வர அமெரிக்கா போல ஆகிவிட்டது. நாள் ஒன்றுக்கு பல்வேறு கத்திக் குத்து சம்பவம், போதைப் பொருட்கள், குழு மோதல், துப்பாகி பிரயோகம் , வங்கிக் கொள்ளை என பலதரப்ப குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொலிசாருக்கு மேலதி அதிகாரங்களை கொடுப்பதே நல்லது.