வெறும் 60 ஆசனங்களை பெற்று 3வது கட்சியாக மாறப் போகும் ரிஷி சுண்ணக்கின் கான்சர் வேட்டிவ் கட்சி !

வெறும் 60 ஆசனங்களை பெற்று 3வது கட்சியாக மாறப் போகும் ரிஷி சுண்ணக்கின் கான்சர் வேட்டிவ் கட்சி !

ஜூலை 4ம் திகதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள கான்சர் வேட்டிவ் கட்சி படு தோல்வியடைய வாய்ப்புகள் இருப்பதாக, உளவுத் துறை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக்கிறகு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது ஆழும் கட்சியாக உள்ள, கான்சர் வேட்டிவ் கட்சி, 3ம் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3ம் இடத்தில் உள்ள லிபரல் கட்சி 2ம் நிலையில் எதிர்கட்சியாக மாற.

லேபர் கட்சியே நிச்சயம் ஆட்சியை அமைக்கும் என்று அந்த உளவுத் தகவல் மேலும் குறிப்பிட்டுள்ளதாம். இதன் அடிப்படையில் வெறும் 60 ஆசனங்களை வென்று கான்சர் வேட்டிவ் கட்சி 3ம் நிலைக்கு தள்ளப் படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எதிர் கட்சி என்ற அந்தஸ்த்தை கூட அது இழக்க கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில், பாதிப்பை சரியாக கையாளவில்லை. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியால், அரசு 64B பில்லியன் பவுண்டுகளை, பாங் ஆப் இங்கிலனிடம் இருந்து கடனாகப் பெற்றது.

பார்த்துப் பாராமல், பவுன்ஸ் பேக் லோன் என்று 50,000 ஆயிரம் படுவுண்டுகளை அள்ளி வீசினார்கள். இதனால் அரசுக்கு 6B பில்லியன் இழப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பேரிடருக்குப் பின்னர் , பிரித்தானியாவில் படிப்படியாக வட்டி விகிதம், உணவுப் பொருட்கள், வரிகள் என்று அனைத்துமே அதிகரித்து. மக்கள் வாழ முடியாத ஒரு சூழ் நிலை தோன்றியுள்ளது. இதனால் பிரித்தானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறார்கள். எனவே இந்த முறை லேபர் கட்சி தனிப் பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.