ஈரானுக்குள் சிக்கிய “Dude 44” அமெரிக்க விமானியை மீட்க அமெரிக்கா நடத்திய ரகசிய நடவடிக்கை உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. F-15E விமானம் சுட்டு வீழ்ந்ததும் காயமடைந்த விமானி மலைப்பகுதிக்குள் ஒளிந்து கொண்டு சுமார் இரண்டு நாட்கள் உயிர் காத்தார். ஈரான் படைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுடன் தேடுதல் நடத்திய நிலையில், அவர் பாறை பிளவுகளுக்குள் மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை மீட்க அமெரிக்கா மிகப்பெரிய ரகசிய நடவடிக்கையை துவக்கியது. சுமார் 100 Special-Operations படையினர், பல போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன. CIA திட்டமிட்ட தவறான தகவல் பரப்பல் மூலம் விமானி வேறு பகுதியில் இருப்பதாக ஈரான் படைகளை திசைதிருப்பியது. இதனால் தேடுதல் நடவடிக்கை தாமதமானது.
முதல் மீட்பு முயற்சியில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் நடவடிக்கை தடைபட்டது. பின்னர் MQ-9 Reaper ட்ரோன்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தி ஈரான் படைகளை தடுக்க அமெரிக்கா “overwhelming firepower” பயன்படுத்தியது. இந்த தாக்குதல்கள் மூலம் விமானி இருந்த பகுதி பாதுகாக்கப்பட்டது.
இறுதியில் கமாண்டோ படை விமானியை மீட்டு வெளியேற்றியது. ஆனால் ஈரானில் தரையிறங்கிய சில அமெரிக்க விமானங்கள் சிக்கியதால், அவை எதிரி கைக்கு போகாமல் அமெரிக்காவே வெடிக்கச் செய்தது. இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிக துணிச்சலான rescue mission என மதிப்பிடப்படுகிறது.