மகனின் வாழ்க்கையை நாசமாக்கிய வடிவேலு… நம்ப வச்சி கழுத்தை அறுத்த சம்பவம்!

மகனின் வாழ்க்கையை நாசமாக்கிய வடிவேலு… நம்ப வச்சி கழுத்தை அறுத்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. இவர் சமீப காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக இவருடன் நடித்த பல நடிகர்கள் இவரை குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார்கள் .

இவருடன் படங்களில் நடித்தால் சம்பளம் கூட கொடுக்க மாட்டார் , இவரை விட அதிகமாக பெர்பார்மென்ஸ் செய்து விடக்கூடாது. மிகச்சிறந்த காமெடி நடிகராக யாரும் எங்களை பேசிவிடக்கூடாது என்றெல்லாம் அவருடன் நடித்த பல பேர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்தனர் .

இந்த நிலையில் தற்போது பிரபல திரைப்ப தயாரிப்பாளர் வி சேகர், வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில்
நான் சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன். அதில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில் வடிவேலு நடிக்கிறேன் என்று சொன்னார்.

அதுமட்டுமல்லாது என்னை நீங்கள் உங்களது படங்களில் நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ அதே போல உங்களது மகனையும் நான் தூக்கி விடுகிறேன் என்று வடிவேலு சொன்னார். நானும் படம் வேலையை ஆரம்பித்தேன்.

கடைசியில் வடிவேலு அரசியலுக்கு சென்றதால் அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி போனது. பிரச்சாரத்திற்குச் சென்றவர் அங்கு சும்மா இல்லாமல், விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து வடிவேலு, மதுரை சென்றுவிட்டார் , இனி ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் என் மகனின் வாழ்க்கை நாசமாகிவிட்டது என தயாரிப்பாளர் வி சேகர் புலம்பியிருக்கிறார்.

athirvu