விடுதலை 2 ரிலீஸ் எப்போ தெரியுமா? அட்டகாசமான அப்டேட் இதோ!

விடுதலை 2 ரிலீஸ் எப்போ தெரியுமா? அட்டகாசமான அப்டேட் இதோ!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது அறிமுகத்தை துவங்கி அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடி நடிகராகவே நடித்து பிரபலமானவள் தான் நடிகர் சூரி .

அதன் பிறகு இவருக்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதுவும் தமிழ் சினிமாவின் மாஸ்தான இயக்குனர் ஆன வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை திரைப்படத்தில் சூரி போலீஸ் ஆபீஸராக நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த திரைப்படத்திற்காக அவர் மிகவும் மெனக்கெட்டு நடித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் கட்டுக்கோப்பான தோற்றத்திற்கு மாறி போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றவாறு நடித்தார் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படைத்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி ஸ்ரீ கௌதம் மேனன் உள்ளிட்ட நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறதாம். இப்படியான இடத்தில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விடுதலை விடுதலை 2 திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக சூரி மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.