Posted in

புசி ஆனந்த் மீது ஆவேசப்பட்ட விஜய்: இது என் குடும்ப விவகாரம் ! எவர் பேச்சையும் கேட்காமல் முடிவெடுக்கும் விஜய்

 

புசி ஆனந்த் மீது ஆவேசப்பட்ட விஜய்: இது என் குடும்ப விவகாரம் ! எவர் பேச்சையும் கேட்காமல் முடிவெடுக்கும் விஜய் - Image 1

தேர்தல் முடியும் வரை கொஞ்சம் அனுசரித்து போவது நல்லது, என்று கூறிய புசி ஆனந்த் மீது மிகவும் ஆவேசமாக பாய்ந்துள்ளார் விஜய். இது எனது குடும்ப பிரச்சனை, இது அரசியல் அல்ல. நீங்கள் இதில் தலையிட தேவை இல்லை என்று கூறியுள்ளார். நிர்மல் குமார் தொடக்கம், ஆதவ் அர்சுணா வரை, இந்த திரிஷா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள், TVK வட்டார உறுப்பினர்கள். 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் குடும்ப விவகாரம் தற்போது அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் ஆலோசகரும், மிக நெருங்கிய நண்பருமான புசி ஆனந்த், கட்சியின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு “சங்கீதாவை வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள், இந்த விவகாரத்தை வெளியே தெரியாமல் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்று அட்வைஸ் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனால் கடும் கோபமடைந்த விஜய், “இது எனது குடும்ப விஷயம், இதில் அரசியல் கிடையாது; தலையிட வேண்டாம்” என்று புசி ஆனந்தை மிகக் கடுமையாகச் சாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாக்குவாதம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சங்கீதா, தற்போது மற்றொரு இடைக்கால மனுவை (Interlocutory Application) தாக்கல் செய்துள்ளார். அதில், “விவாகரத்து வழக்கு முடியும் வரை, அல்லது தனக்கு நிகரான மாற்று வசதி செய்து தரும் வரை, நீலாங்கரையில் உள்ள தனது கணவரின் வீட்டிலேயே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார். லண்டன் குடியுரிமை கொண்ட தனக்கு சென்னையில் தங்குவதற்கு வேறு வீடு இல்லை என்றும், தனது கணவரின் அந்தஸ்துக்கு ஏற்ப அதே வீட்டில் தங்குவது தனது சட்டப்பூர்வ உரிமை என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு சங்கீதா தனது உடைமைகளை எடுப்பதற்காக நீலாங்கரை வீட்டிற்குச் சென்றபோது, அவரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று பாதுகாப்பு ஊழியர்களுக்கு விஜய் உத்தரவிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் வீட்டின் கேட் பூட்டப்பட்ட நிலையில், சங்கீதா உள்ளே செல்ல முடியாமல் திரும்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் தன்னை “வீட்டை விட்டு வெளியேற்ற” (Eject) முயற்சிப்பதாக சங்கீதா நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். 26 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது வீட்டிற்குள்ளேயே நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது சங்கீதாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் மற்றும் கட்சிப் பணிகள் இதனால் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் அவரது தொண்டர்கள் உள்ளனர். குறிப்பாக, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாயின் பக்கம் நிற்பதாகவும், மகள் திவ்யா ஷாஷா இருவரையும் இணைக்கப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் அரசியல் மாநாடுகள் மற்றும் தேர்தல் வேலைகளில் பிசியாக இருக்கும் விஜய், மறுபுறம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் புயலை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தமிழகத்தின் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *