கத்தி படத்தின் Deleted சீன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கத்தி படத்தின் Deleted சீன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான நடிகர் விஜய் நடிப்பில். கடந்த 2014 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் கத்தி. இத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் எடுத்திருந்தார் .

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி படமாக வசூல் குவித்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா தான் நடித்திருந்தார். தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயம் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுக்க விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .

ஆனால், நம்ம ஊருக்கு வந்து நம்ம தண்ணீரை பாட்டிலில் பேக் பண்ணி விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணமழை கொட்டுகிறது . இது அரசு அனுமதியோடு நடந்து வருகிறது என்பதை மறுக்க முடியாத உண்மை என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்து போய் இன்று அரசே அந்த வேலையை செய்யும் ஆபத்தான நிலையை வந்தடைந்து இருக்கிறது என விவரிக்கும் படம் தான் இந்த கத்தி திரைப்படம்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த வீடியோ..