தம்பி மகன் “பிரேம்ஜி’ திருமணத்திற்கு வராத இளையராஜா…. காரணம் என்ன தெரியுமா?

தம்பி மகன் “பிரேம்ஜி’ திருமணத்திற்கு வராத இளையராஜா…. காரணம் என்ன தெரியுமா?

இசைஞானி இளையராஜாவின் தம்பி மகன் ஆன நடிகர் பிரேம்ஜி பல வருடங்களாக திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். கிட்டத்தட்ட 47 வயதாகியும் அவர் திருமணமே செய்யாமல் இருந்து வந்ததால் இவர் கடைசி வரை திருமணம் செய்ய மாட்டார் என நெட்டிசன்கள் கூறி வந்தனர் .

அது மட்டும் இல்லாமல் தான் ஒரு முரட்டு சிங்கிள் என அணியும் உடைகளில் எழுதப்பட்ட வாசகம் கொண்ட உடைகளை அணிந்து வந்ததால் இவருக்கு திருமணம் மீது இஷ்டமே இல்லை போல என பலரும் பேசத் தொடங்கினார்கள் . தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் ,பாடல் ஆசிரியராகவும், பாடகராவும் இருந்து வருகிறார்.

இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் தற்போது பிரேம்ஜி இந்து என்ற சேலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாக நட்பாக பழகிப் பின்னர் அது காதலாக மாறியதாக கூறுகிறார்கள். திருத்தணியில் மிகவும் சிம்பிளான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தனது பெரியப்பாவான இசைஞானி இளையராஜா பிரேம்ஜியின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையாம். இதற்கான காரணம். இளையராஜாவெளிநாட்டில் நடக்கும் கான்சர்ட்டில் இருப்பதால் தான் வரமுடியாத நிலை ஏற்பட்டியிருக்கிறதாம். ஆனால், பிரேம்ஜியையும், மணமகளையும் திருமணத்திற்கு முன்பே வீட்டிற்கு வரவழைத்து விருது கொடுத்து பரிசையும் வழங்கியிருக்கிறார்.