“காதல் கோட்டை” வாய்ப்பை அப்பாவால் இழந்த விஜய் – எப்படி தெரியுமா?

“காதல் கோட்டை” வாய்ப்பை அப்பாவால் இழந்த விஜய் – எப்படி தெரியுமா?

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் சக்கை போட்டு திரைப்படம் தான் காதல் கோட்டை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

பார்க்காமலே காதல் உருவாகி பின்னர் கடைசியாக கிளைமாக்ஸில் காதலர்கள் சேரும் இந்த காட்சி புதிதாக அப்போது இருந்ததால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அகத்தியர் இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆக இருந்த வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் வாய்ப்பு முதலில் அஜித்திற்கு செல்ல வில்லையாம் தளபதி விஜய்க்கு தான் சென்றதாம்.ஆனால்,அந்த பட வாய்ப்பு வர தவறவிட்டிருக்கிறார். வாய்ப்பை தவறவிட்ட விஜய் மிகவும் வருந்தியதாக கூறப்படுகிறது. அதை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அஜித்திற்கு செல்லவில்லை, விஜய்யிடம் தான் சென்றுள்ளது. முதலில் இந்த கதையை அகத்தியன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரரிடம் கூறியுள்ளார். கதையை கேட்டுவிட்டு அவர் ஒரு 6 மாதம் காத்திருக்க முடியுமா, இப்போது விஜயால் கால்ஷீட் தர முடியாது என கூறியிருக்கிறார்.

ஆனால் காதல் கோட்டை திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு தள்ளி போட முடியாது என கூறி அடுத்த நாயகனான அஜித்தை தேடி சென்றுள்ளனர். அவர் கதையை கேட்டு ஓகே செய்ய அப்படியே படமும் உருவாகியுள்ளது.