நார்வேயின் மிகப்பெரிய அரசு நிதியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள், எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களில் இந்த நிதி முதலீடு செய்துள்ளதால், அது தொடர்பாக பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன. இது ஒரு தார்மீகப் பிரச்சினையாகவும், அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது.
நோர்வேயின் சில இடதுசாரி எதிர்க்கட்சிகள் இஸ்ரேலில் இருந்து முழுமையாக முதலீடுகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. ஆனால் ஆளும் அரசாங்கம், இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விவகாரம், தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.