சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் தேசிய விமான சேவையில் பெரும் குழப்பம்!

சைபர் தாக்குதல்: ரஷ்யாவின் தேசிய விமான சேவையில் பெரும் குழப்பம்!

ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃப்ளோட் (Aeroflot), தங்களுக்கு எதிரான சைபர் தாக்குதலை அடுத்து டஜன் கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் சார்பு ஹேக்கர்கள் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.

சைலன்ட் க்ரோ (Silent Crow) என்ற ஹேக்கர் குழு, பெலாரஷ்ய குழுவான சைபர்பார்ட்டிசன்ஸ் (Cyberpartisans) உதவியுடன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “நீண்டகால மற்றும் பெரிய அளவிலான நடவடிக்கை… ஏரோஃப்ளோட்டின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை முழுமையாக அழித்துவிட்டது” என்று சைலன்ட் க்ரோ தங்கள் டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலால், ரஷ்யாவிற்குள் செல்லும் மற்றும் பெலாரஸ், ஆர்மீனியாவுக்கான வழித்தடங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட விமானங்களை ஏரோஃப்ளோட் ரத்து செய்துள்ளது. இந்தச் சம்பவம் “கவலை அளிக்கிறது” என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. தங்கள் தகவல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு பரவலான தாமதங்களுக்கும் வழிவகுத்தது என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்கள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.