Posted in

பிரிட்டனை அதிரவைத்த எலான் மஸ்க்! வீட்டுக்கு வீட்டு மின்சாரம் வழங்கும் டெஸ்லா!

தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சிகளை நிகழ்த்தி வரும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், தற்போது மின்சார விநியோகத் துறையிலும் கால் பதித்து பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், கடந்த ஜூலை 25-ம் தேதி, பிரிட்டன் நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான Ofgem-யிடம், வீடுகளுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்தத் திடீர் நடவடிக்கை, பிரிட்டனின் மின்சார சந்தையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே பவர்வால் (Powerwall) எனப்படும் வீட்டுப் பயன்பாட்டிற்கான பேட்டரிகள், சோலார் பேனல்கள், மற்றும் வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. இந்த நிலையில், முழுமையான மின்சார விநியோகச் சேவையையும் வழங்குவதன் மூலம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, சேமிப்பது, மற்றும் தேவைக்கேற்ப பயன்படுத்துவது என ஒரு ஒருங்கிணைந்த சேவையை வழங்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனில் ஏற்கெனவே Octopus Energy, British Gas போன்ற பெரிய நிறுவனங்கள் மின்சார விநியோகத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்களுடன் டெஸ்லா நேரடியாகப் போட்டி போடும். மேலும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைப் பெறுவதற்கும், புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பல சவால்கள் காத்திருக்கின்றன.

எனினும், எலான் மஸ்கின் இந்த அதிரடித் திட்டம், பிரிட்டன் மக்களின் எரிசக்தி பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. டெஸ்லாவின் இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு தற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.

Loading