லக்ஸம்பர்க் U21 கால்பந்து அணி வீரர்கள் பயிற்சியை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு பஸ்ஸில் திரும்பி கொண்டிருந்தபோது, ஒரு கோர விபத்தில் சிக்கினர். ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்ஸின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. விபத்துக்குப் பிறகு, பஸ்ஸில் இருந்த வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் இரண்டு மணி நேரம் உள்ளேயே சிக்கித் தவித்தனர். பஸ்ஸிலிருந்து வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டதால், டிரைவரின் கதவு வழியாக மட்டுமே அவர்கள் வெளியேற முடிந்தது.
இந்த கோர விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அனைவரும் சிறிய வெட்டுக்காயம், சிராய்ப்புகள் மற்றும் முதுகுவலி போன்ற காயங்களுடன் தப்பித்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு வீரர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம், கால்பந்து அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.