தென் ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ: வெளியேற்ற உத்தரவு, பெரும் பதற்றம்!

தென் ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ: வெளியேற்ற உத்தரவு, பெரும் பதற்றம்!

ஐரோப்பிய கண்டத்தின் தெற்குப் பகுதிகள் வரலாறு காணாத வெப்ப அலைகளாலும், கோரமான காட்டுத் தீயாலும் திணறி வருகின்றன. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ள காட்டுத் தீயால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நெருக்கடி காரணமாகப் பல பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தென் பகுதியில் உள்ள ஆட் (Aude) மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயானது, ஒருவரைக் கொன்றதுடன், ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். பாரிஸ் நகரத்தின் பரப்பளவை விட அதிகமான பகுதிகள் தீயில் கருகியுள்ளன. 1,800-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்பெயின், போர்ச்சுகலில் வெப்பம் கொளுத்துகிறது: ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் வெப்ப நிலை 43 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இதனால், பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினின் தாரிஃபா (Tarifa) நகரில் 1,500-க்கும் மேற்பட்ட மக்களும், 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, போர்ச்சுகலில் இந்த ஆண்டு மட்டும் 42,000 ஹெக்டேருக்கு மேல் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது.

பருவநிலை மாற்றம் தான் காரணமா? இந்தக் கோரத் தாக்குதலுக்குப் பருவநிலை மாற்றம் மற்றும் வறட்சியே முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள், தென் ஐரோப்பாவில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.