கடுமையான குற்றச்சாட்டில் சிக்கிய பிரீமியர் லீக் நடுவர்! அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்!

கடுமையான குற்றச்சாட்டில் சிக்கிய பிரீமியர் லீக் நடுவர்! அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்!

பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக்கின் முன்னாள் நடுவர் டேவிட் கூட், ஒரு குழந்தையைப் பற்றிய ஆபாசமான வீடியோ வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த செய்தி கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான டேவிட் கூட், நாட்டிங்ஹாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். இது ஒரு “பிரிவு A” குற்றச்சாட்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ஆபாசமான மற்றும் அநாகரிகமான வீடியோ அல்லது புகைப்படங்களைப் பதிவிறக்குவது, பகிர்வது அல்லது சேமிப்பது போன்ற மிகவும் கடுமையான குற்றங்களில் ஒன்றாகும்.

இந்த விவகாரம், கடந்த 2024-ஆம் ஆண்டு கூட் மீது நடத்தப்பட்ட ஒரு விசாரணையின் போது, அவரது மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது வெளிவந்துள்ளது. அப்போது, ஒரு 15 வயது குழந்தையை சம்பந்தப்படுத்திய வீடியோ கண்டறியப்பட்டதாக வழக்கு தொடுக்கும் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூட்-க்கு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர் இந்த வழக்கை ஜூரி விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும்.