நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ‘ஆர்டெமிஸ் II’ திட்டத்தை பிப்ரவரி 2026-க்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிலவுக்குச் செல்லும் முதல் பயணமாக இருக்கும்.
இந்த பயணத்தின் மூலம், நான்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு நிலவைச் சுற்றி வந்து, விண்வெளி ஓடத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வார்கள். அவர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இந்தப் பயணம், எதிர்காலத்தில் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதற்கான ‘ஆர்டெமிஸ் III’ திட்டத்திற்கு ஒரு முன்னோடிப் பயணமாக அமையும்.
முன்னதாக, இந்த திட்டம் ஏப்ரல் 2026-ல் செயல்படுத்தப்படும் என நாசா தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அதனை பிப்ரவரி மாதத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் நாசாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்களும், கனடா விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் அடங்குவர்.