ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro): பிரேசிலில் உள்ள விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த ஒரு பெண் திடீரென மரணமடைந்த நிலையில், அவரது உடலில் இருந்து 26 ஐபோன்கள் மீட்கப்பட்டுள்ளன.
மரணமடைந்த பெண்ணின் உடலை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது மார்பு மற்றும் கைகால்களில் ஐபோன்கள் ஒட்டப்பட்டும், கட்டப்பட்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடமைகளைச் சோதித்தபோது, மேலும் பல ஐபோன்களும், மதுபான பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டன.
மரணத்தின் மர்மம் என்ன?
மரணத்தின் காரணம் குறித்து குழப்பம் நீடிக்கிறது. அந்தப் பெண்ணின் உடலிலும், உடமைகளிலும் போதைப்பொருள் ஏதும் இல்லை என மோப்ப நாய்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், இந்த மரணம் குறித்த மர்மம் மேலும் அதிகரித்துள்ளது. இது கடத்தல் சம்பவமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனப் பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.