ஐரோப்பிய விமான நிலையங்களில் ஏற்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் ஒருவர் கைது !

ஐரோப்பிய விமான நிலையங்களில் ஏற்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் ஒருவர் கைது !

கடந்த வார இறுதியில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் உட்பட ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்களில் விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய இணையத் தாக்குதல் குறித்து தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) விசாரணை நடத்தி வந்தது. இந்தத் தாக்குதல், செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கு மென்பொருள் வழங்கும் ‘கொலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ (Collins Aerospace) என்ற நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, மேற்கு சசெக்ஸ் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாக NCA தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர், கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறார். எனினும், விசாரணை தொடர்வதால், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றாலும், விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என NCA அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.