வெறு YouTube மூலமாக யாழில் பிரபல்யமான மருத்துவர் அர்சுணாவை, யாழ் மக்கள் நம்பி அவருக்கு வாக்குப் போட. சுயேட்சையாக வென்ற அர்சுணா, தனது TRP ரேட் எகிறவேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலைகளைக் காட்ட, இதனை அடுத்து எழுந்த பல புகார்களில் சிக்கி, தற்போது சி.ஐ.டி அலுவலகம் சென்று வருவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்.
MP ஆகி இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றியதே இல்லை. இவருக்கு ஊது குழலாக யாழில் இயங்கும் சில YouTube சேனல்களும் உள்ளது. “அமைதிப் படை” திரைப்படத்தில் நடிகர் மணி வண்ணம் அமாவாசையை MLA ஆக்க பேசியது போல, (அமெரிக்க அரசுக்கும் ரஷ்யாவும் என்னை எதிர்கிறது) என்று கூறுவார்.
அது போல அர்சுணா, இன்று பேசியுள்ளார். JVP அரசுக்கு நான் பெரும் தலை வலியாக இருக்கிறேன். JVP அரசுக்கு நான் சிம்ம சொப்பனம். இதனால் அவர்கள் என்னை MP பதவியில் இருந்து தூக்கப் பார்கிறார்கள் என்று பேசியுள்ளார். கடைந்து எடுத்த முட்டாள் கூட இப்படி எல்லாம் பேச மாட்டான். தற்போது உள்ள JVP அரசுக்கு சிங்கள எதிர்கட்சிகள் கூட தலைவலியாக இல்லை. அந்த அளவு பெரும்பாண்மையோடு அவர்கள் ஆட்சியில் இருக்கிறார். அர்சுணாவால் என்ன குடைச்சல் கொடுக்க முடியும் ? அல்லது இதுவரை அவர் என்ன குடைச்சலை கொடுத்து இருக்கிறார் என்று கேட்டாலே புரிந்துவிடும்.
அட 5 மணி பஸ் 5 மணிக்கு வந்திச்சாம், 6 மணி பஸ் 6 மணிக்கு வந்திச்சாம் … அப்படி இல்ல இருக்கு இவன் பேசுறது …. என்று சொல்லும் அளவுக்கு இருக்கு இந்த அர்சுணா MPன் பேச்சு. முட்டாளை MP ஆக்கினால் என்ன எல்லாம் நடக்கும் என்பதற்கு, உலகில் இவரே ஒரு நல்ல உதாரணம் !