கொழும்பு நீதிமன்றில் அதுவும் நீதிபதி முன் நிலையில் வைத்து, இலங்கை நிழல் உலக தாதா கணேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சுட்ட நபர், பொலிசாரிடம் இருந்து தப்பி துணிக் கடை ஒன்றுக்குச் சென்று, உடைகளை மாற்றிவிட்டு அங்கிருந்து பந்தளம் என்ற பகுதிக்கு அவர் செல்லும் வேளை, பொலிசார் அவரைக் கைது செய்தார்கள். அவர் பெயர் சமிந்து தில்ஷன்.
அவரிடம் பொலிசார் பல மணி நேரமாக விசாரித்ததில், மற்றும் ஒரு நிழல் உலக தாதா கெஹல் பத்தர பத்மே என்பவரே காணேமுல்லவை சுடச் சொன்னதாக ஒப்புக் கொண்டதோடு. நீதிமன்றத்திற்கு துப்பாக்கியை எடுத்து கொண்டு வந்து தன்னிடம் தந்தவர், இஷாரா செவ்வந்தி என்ற பெண் என்று கூறினார். 14 தனிப்படை அமைத்து இஷாவை தேடி வந்தது இலங்கைப் பொலிஸ். ஆனால் அவர் சிக்கவில்லை. 8 மாதங்கள் ஆகியதால் அவர் நாட்டை விட்டு தப்பி இருக்க வாய்ப்பு உள்ளதாக நம்பிய இலங்கை பொலிசார், சர்வதேச பொலிசாரை நாடியுள்ளார்.
இதேவேளை இஷாரா செவ்வந்தி, இலங்கையில் இருந்து தப்பி இந்தியா சென்று அங்கிருந்து நேபாள் சென்றுள்ளார். அங்கே சென்று மறைந்து வாழாமல், நேபாளில் உள்ள மிக முக்கிய போதைப் பொருள் கடத்தம் மாஃபியாவோடு இருந்துள்ளார். இஷாவின் புகைப்படத்தை சர்வதேச பொலிசாருக்கு இலங்கைப் பொலிசார் கொடுத்த வேளை. அவர் கெட்ட நேரம் சில நேபாள் மாஃபியாக்கள் லோக்கல் பொலிசாரிடம் சிக்க. அவர்களுடன் இஷாவும் இருந்துள்ளார். அவரிடம் சரியான ஆவணங்கள் இருக்கவில்லை.
இதனால் நேபாள் பொலிசார் இஷா தொடர்பாக சர்வதேச பொலிசாரை நாட, அவர்கள் ஏற்கனவே தேடிக் கொண்டு இருக்கும் பெண் தான் இவர் என்பது புரிய. சர்வதேச பொலிசார் அலேக்காக இஷாவை கைது செய்து தமது கஸ்டடியில் கொண்டு வந்து, இலங்கை பொலிசாருக்கு அறிவித்துள்ளார்கள். இலங்கையில் இருந்து நேபாள் விரைந்த பொலிசார் இஷாவை கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்படி கொடூரமாக கொலை செய்த இஷாரா செவ்வந்தி குற்ற உணர்ச்சி இன்றி சாதாரணமாக போலீஸ் வாகனத்தில் வலம் வருகிறார். நேபாளத்தில் இருந்து அவரை விமானத்தில் இலங்கைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் சிரித்தபடி இருந்தார். அதேபோல் காரில் நீதிமன்றம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் அவர் ஹேப்பியாக சிரிக்கிறார். பார்க்க சினிமா நடிகை போல் அவர் உள்ளதால் இணையதளங்களில் வீடியோ வெளியானது. இதையடுத்து அவரது பின்னணியை தேடிய பலருக்கும் இந்த கொலை வழக்கு செய்தி தான் கிடைத்துள்ளது. அது அனைவரையும் அதிர வைத்துள்ளது.