தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்றுக்  காலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவர்கள் அவருக்கு சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.